இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றம், பாகிஸ்தான் பங்குச் சந்தையை (PSX) முடக்கும் அளவுக்கு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் மீதும், பாகிஸ்தான் இந்தியா மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாக 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து அறிவித்தது. இதனால் இரு நாட்டின் முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதால் எப்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான கராச்சி-100 (KSE-100) நேற்றைய வர்த்தகம் தொடங்கிய முதல் ஐந்து நிமிடங்களில் 2%க்கும் அதிகமாக, அதாவது 2,500 புள்ளிகள் சரிந்து 1,14,740.29 ஆக குறைந்தது. பின்னர் சில இழப்புகளை மீட்டுக் கொண்டாலும், மதியம் 3 மணியளவில் இது இன்னும் 1,532.42 புள்ளிகள், அதாவது 1.31% சரிந்து 1,15,693.72 ஆக இருந்தது.

ஆனால் இன்று மொத்த பங்குச்சந்தையும் முடங்கி முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பங்குச்சந்தை முடங்கியுள்ளது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் பாகிஸ்தான் பங்குச்சந்தை மெயின்டனெஸ் பணிக்காக அடுத்த அறிவிப்பு வரும் வரையில் முடக்கப்பட்டு உள்ளது. காத்திருமைக்கு நன்றி என்ற தகவலை பாகிஸ்தான் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது.
இதற்கிடையே, இந்திய பங்குச் சந்தையும் இந்த பதற்றமான சூழ்நிலையில் சுமார் 1,000 புள்ளிகள் சரிந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் பங்குச் சந்தை இணையதளம் இயங்காமல் போனதற்கு அதிகாரப்பூர்வமாக எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இணையதளத்தில் ஒரு எளிய செய்தியில் "நாங்கள் விரைவில் திரும்புவோம்" என்று கூறப்பட்டுள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பின்பு அடுத்தடுத்து பாகிஸ்தான் நாட்டில் நடப்பது அனைத்து அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கும், முதலீட்டு சந்தைக்கும் அச்சத்தை கொடுத்து வருகிறது.
பங்குச்சந்தை இணையதள செயலிழப்பு மற்றும் சந்தை சரிவுக்கு பிறகு, X என்ற சமூக ஊடகத்தில் பாகிஸ்தான் மக்கள் பல்வேறு விதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சிலர் இது பாகிஸ்தான் பொருளாதாரத்தின் பலவீனத்தைக் காட்டுவதாகவும், சிலர் இந்தியாவின் பதிலடியின் அச்சமாகவும் கருதுகின்றனர். முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதை தடுக்கவும் தான் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் பங்குச் சந்தையின் எதிர்காலம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றம் எப்படி தீர்கிறது என்பதைப் பொறுத்து இருக்கும். இந்த பதற்றம் தொடர்ந்தால், முதலீட்டாளர்கள் அதிகளவில் பாதிக்கப்படலாம். இந்த பாதிப்பு இரு நாடுகளிலும் இருக்கும் என்பது தான் அடுத்த முக்கியமான விஷயம்.
More From GoodReturns

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications