இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் பாகிஸ்தான் பங்குச் சந்தையில் கடுமையாக எதிரொலித்திருக்கிறது. பாகிஸ்தான் பங்குச்சந்தை கடுமையாக வீழ்ச்சி அடைந்து 820 பில்லியன் ரூபாய் வரையிலான மதிப்பை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர்.
மே 9ஆம் தேதி வரை பாகிஸ்தான் பங்குச்சந்தை குறியீட்டு எண் KSE 100 Index சுமார் 16 சதவீதம் வ சரிந்திருப்பது தெரியவந்துள்ளது. மே 9ஆம் தேதி கராச்சி பங்குச்சந்தையில் வழக்கம் போல வர்த்தகம் தொடங்கியது. ஆனால் சில நிமிடங்களிலேயே சரிவடைய தொடங்கி 1106 புள்ளிகள் வரை சரிவடைந்தது. கடந்த ஏப்ரல் மாதம் வரலாறு காணாத உச்சத்தை எட்டிய கராச்சி பங்கு சந்தை மதிப்பு தற்போது வரை 16 சதவீதம் சரிந்து இருக்கிறது.

மே 8ஆம் தேதி மட்டும் 7.6% வரை சரிவடைந்து முதலீட்டாளர்கள் 820 மில்லியன் ரூபாயை இழந்தனர். ஒரே நாளில் இவ்வளவு சரிவு ஏற்பட்டதால் பாகிஸ்தான் பங்குச்சந்தையில் சிறிது நேரம் வர்த்தகமே நிறுத்தி வைக்கப்பட்டது. மே 9ஆம் தேதி கராச்சி பங்குச்சந்தை 1,05,133 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. ஆனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஏராளமான முதலீட்டாளர்கள் தங்கள் கைவசம் இருந்த பங்குகளை விற்பனை செய்தனர்.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றமும் நேற்றைய தினம் இரவு இந்தியா பாகிஸ்தான் இடையே இருந்த நிகழ்ந்த பதிலடி தாக்குதல்களுமே இதற்கு காரணம். மே 9ஆம் தேதி KSE 100 இண்டெக்ஸ் இன்ட்ராடேவில் 1,02,420 என சரிவை கண்டது. இதனை அடுத்து இந்த செய்தியை எழுதும் சமயத்தில் பாகிஸ்தான் பங்குச்சந்தை குறியீட்டு எண் 1,03,066 புள்ளிகள் என உயர்ந்து வர்த்தகமானது.
கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பங்குச்சந்தை குறியீட்டு எண் 1,20, 796 என வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. ஆனால் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு சரிவடைய தொடங்கிய பங்குச்சந்தை பஹல்காம் தாக்குதல் மற்றும் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ஆகிய தாக்குதலை தொடர்ந்து படிப்படியாக சரிவடைந்து தற்போது வரை 16 சதவீதம் வரை சரிவு கண்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதலில் இந்தியாவின் கை ஓங்கி இருப்பதன் காரணமாக முதலீட்டாளர்கள் அச்சம் காரணமாக வந்தவரை லாபம் என பாகிஸ்தான் பங்குச்சந்தையில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்கின்றனர்.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். இதனை அடுத்து ராஜாங்க ரீதியான பல நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. மே 7ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் இருந்த பயஙகர்வாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. மே 9ஆம் தேதி மீண்டும் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications