இந்தியாவை தொட்டா இதுதான் நடக்கும்.. பாகிஸ்தானுக்கு முதல் அடி..!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து, இந்தியா பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க போகவதாக ஏப்ரல் 23ஆம் தேதி இரவு 9.15 மணிக்கு மத்திய வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் செய்தியாளர்கள் சந்திப்பு மூலம் இந்திய மக்களுக்கும், பாகிஸ்தானுக்கும் தெரிவித்தார். இந்த அறிவிப்பில் பெரும் பிரச்சனையாகவும், அதிரச்சியாகவும் பர்க்கப்பட்டது 2 விஷயம்.

ஒன்று சிந்து நிதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது, மற்றொன்று SVES விசாவின் கீழ் இந்தியாவில் இருக்கும் அனைத்து பாகிஸ்தானியர்களும் 48 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது தான். நேற்று வெளியான 5 முக்கிய அறிவிப்பும் பாகிஸ்தான் மக்களை மட்டும் அல்லாமல் அந்நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், வாழ்வியலை பாதித்துள்ளது. இதனுடைய ரியாக்ஷன் அடுத்த 24 மணிநேரத்தில் பங்குச்சந்தையில் எதிரொலித்துள்ளது.

இந்தியாவை தொட்டா இதுதான் நடக்கும்.. பாகிஸ்தானுக்கு முதல் அடி..!!

தட்டுத்தடுமாறி கடன் வாங்கி பாகிஸ்தான் அரசு தனது பொருளாதாரத்தை திவால் ஆகாமல் காப்பாற்றி வரும் வேளையில் இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கஷ்மீரில் அதிகம் சுற்றுலா பயணிகள் இருக்கும் பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த இந்தியா 5 முக்கிய உத்தரவை வெளியிட்ட பின்று பாகிஸ்தான் பங்குச்சந்தை மற்றும் பொருளாதாரம் அடி வாங்க துவங்கியுள்ளது.

வியாழக்கிழமை பாகிஸ்தான் பங்குச் சந்தை (PSX) கடுமையான வீழ்ச்சியுடன் தொடங்கியது. ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - காசா, சீனா - தைவான் என உலக நாடுகளில் போர் பதற்றம் இருந்து வந்த நிலையில் இந்தியாவை சுற்றி மட்டுமே புவிசார் அரசியல் பதற்றங்கள் இல்லாமல் இருந்தது, இந்த தாக்குதல் மூலம் புதிய பதற்றம் ஆசிய சந்தையில் உருவாகியுள்ளது.

பாகிஸ்தான் பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: பாகிஸ்தானின் முக்கிய பங்கு குறியீடான KSE-100, வியாழக்கிழமை காலை வர்த்தகத்தின் முதல் ஐந்து நிமிடங்களில் 2.12% அல்லது 2,485.85 புள்ளிகள் சரிந்து 114,740.29 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்தது. ஆனால் மதிய வர்த்தகத்தில் சரிவை பாதியாக குறைத்து 1535 புள்ளிகள் சரிவுடன் 115,591 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

புதன்கிழமையன்று ஏற்கனவே பாகிஸ்தான் பங்குச் சந்தை கடுமையான வீழ்ச்சியுடன் முடிவடைந்திருந்த நிலையில் வியாழக்கிழமை படுமோசமான சரிவை பதிவு செய்துள்ளசு. சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி மதிப்பீட்டை 2.6% ஆகக் குறைத்து அறிவித்ததைத் தொடர்ந்து புதன்கிழமை வீழ்ச்சியை பதிவு செய்தது.

இதனுடன், பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 0.00355 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது, அரசியல் உறுதியின்மை மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து ஃபிட்ச் மதிப்பீட்டு நிறுவனம் (Fitch Ratings) எச்சரிக்கை விடுத்திருந்தது. இவை அனைத்தும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகம் பாதித்துள்ளன. கடந்த 3 வருடமாக ஐஎம்எப் அமைப்பிடம் போராடி கடன் பெற்ற பாகிஸ்தானுக்கு இது பெரும் இழப்பு.

இந்தியப் பங்குச் சந்தைகளில் தாக்கம்: இந்தியாவில், வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் பங்குச் சந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்றாலும், காலை 11:37 மணியளவில் (இந்திய நேரப்படி),சென்செக்ஸ் 233 புள்ளிகள் சரிந்து 79,884 புள்ளிகளாகவும், நிஃப்டி50 குறியீடு 69 புள்ளிகள் குறைந்து 24,259 புள்ளிகளாகவும் இருந்தன.

மதியம் 1.21 மணிக்கு சென்செக்ஸ் 264.05 புள்ளிகள் சரிந்து 79,849.47 புள்ளிகளிலும், நிஃப்டி 68.60 புள்ளிகள் சரிந்து 24,260.60 புள்ளிகளை எட்டியுள்ளது.

இந்தியப் பங்குச் சந்தைகளின் இந்த மிதமான சரிவு, பாகிஸ்தானுடனான புவிசார் அரசியல் பதற்றங்களை முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் முதலீடு செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும் காரணத்தால் இந்த நிலை உருவாக்கியுள்ளது.

இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம், இந்துஸ் நீர் ஒப்பந்தத்தை (Indus Waters Treaty) இடைநிறுத்துவது, வாகா-அட்டாரி எல்லையை உடனடியாக மூடுவது மற்றும் சார்க் (SAARC) கட்டமைப்பின் கீழ் பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட விசா விலக்குகளை ரத்து செய்வது உள்ளிட்ட முடிவுகளை அறிவித்தது இந்திய வெளியுறவு துறை அமைச்சகம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+