பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் அதிகரித்துவரும் பதற்றம் காரணமாக, வெள்ளிக்கிழமை காலை பாகிஸ்தான் பங்கு சந்தை (PSX) திறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே முதலீட்டாளர்கள் பதற்றமடைந்தனர். அந்நாட்டு பங்குச்சந்தையின் முக்கிய குறியீடான KSE-100 திடீரென 3,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது, இதனால் ஓரே நாளில் பல ஆயிரம் கோடி சந்தை மதிப்பீட்டை பாகிஸ்தான் முதலீட்டாளர்கள் இழந்தனர்.
இன்று காலையில் முதலே பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் இரு நாடுகளும் கடுமையான தாக்குதலை நடத்திய நிலையில் காலை 9:20 மணிக்கு KSE-100 குறியீடு 165,813.86 என்ற நிலைக்கு விழுந்தது. இது முந்தைய நாளை விட 3,079.22 புள்ளிகள் அல்லது 1.82% குறைவாகும்.

போர் அச்சம்
பொதுவாக ஒரு நாட்டில் போர் அல்லது ராணுவ மோதல் அதிகரிக்கும்போது, அந்நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழும். இதனால் முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று பணத்தை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற முயற்சிப்பார்கள். இதுவே "risk aversion" என்று அழைக்கப்படுகிறது. அதாவது, அபாயத்தை தவிர்க்க முயற்சி.
அமெரிக்கா வெனிசுலா-வை தாக்கிய போதும் இதே போன்ற சரிவு வெனிசுலா பங்குச்சந்தையில் ஏற்பட்டது.
எந்த துறைகள் பாதிக்கப்பட்டது?
பாகிஸ்தான் பங்குச்சந்தையின் இன்றைய சரிவு மூலம் ஒரு சில நிறுவனங்களை மட்டும் பாதிக்கவில்லை, ஒட்டுமொத்த பாதிப்பாக மாறியது. கார் தயாரிப்பு நிறுவனங்கள், சிமெண்ட் நிறுவனங்கள், வங்கிகள், உரத் தயாரிப்பு நிறுவனங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆராய்ச்சி நிறுவனங்கள், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் (OMCs), மின் உற்பத்தி நிறுவனங்கள், சுத்திகரிப்பு ஆலைகள் என பெரும்பாலான துறைகளிலும் பங்குகளின் விலை சரிந்தன.

சந்தை மீட்சி
காலை ஏற்பட்ட கடும் சரிவுக்குப் பிறகு, மதியம் 11:55 மணியளவில் சந்தை சிறிதளவு மீண்டது. KSE-100 சுமார் 65 புள்ளிகள் உயர்ந்து 168,893.08 என்ற நிலைக்கு சென்றது. ஆனால் சந்தை மிகவும் ஏற்றத் தாழ்வுகளுடன் இருந்தது. இதனால் ஒரே நாளில் அதிகபட்சமாக 169,379.97 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக 165,811.87 புள்ளிகளையும் தொட்டது.

பாகிஸ்தான் பங்குச் சந்தை முடங்கியது
ஆனால் அந்த மீட்பு நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மதியம் 11:17 மணிக்கு KSE-100 மீண்டும் 168,375.08 ஆக குறைந்து -518.01 புள்ளிகள் (-0.31%) சரிவைக் கண்டது. இதனால் சந்தை இன்னும் பதற்றத்தில் இருந்தது தெளிவாகிறது.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், பாகிஸ்தான் பங்குச் சந்தை (PSX) இணையதளம் திடீரென செயலிழந்துள்ளது. முதலீட்டாளர்கள் பெரும் பீதியில் இருக்கும் போது, PSX-இன் அதிகாரப்பூர்வ தளம் "maintenance" என்று காட்டி முடங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் நிலைமை என்ன?
ஆப்கானிஸ்தானுக்கு தற்போது பங்கு சந்தை இல்லை. காபூலில் பங்கு சந்தை அமைப்பதற்கான திட்டங்கள் முன்பு இருந்தாலும், தற்போது பொதுமக்கள் பங்குகளை வாங்கி விற்கும் அமைப்பு இல்லை.
அங்குள்ள பெரும்பாலான தொழில்கள் தனியார் முதலீடு, குறுகிய கால வங்கி கடன் அல்லது "ஹவாலா" போன்ற பண பரிமாற்ற முறைகளில் இயங்குகின்றன. அதிகாரப்பூர்வ வங்கி அமைப்பும் மிகவும் சிறியது என்பதால் பங்குச்சந்தை அவசியம் இல்லாமல் உள்ளது. பெரும்பாலான மக்கள் வங்கி அமைப்புக்கு வெளியே பண பரிவர்த்தனை செய்கிறார்கள், இதனால் வங்கி அமைப்பும் வலிமையாக இல்லாத நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது.
போர் பதற்றமும்.. பங்குச்சந்தையும்..
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பதற்றம் நேரடியாக பாகிஸ்தான் பங்கு சந்தையை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. போர் அச்சம் அதிகரித்தால் முதலீட்டாளர்கள் பயப்படுவார்கள்; பயம் அதிகரித்தால் சந்தை சரியும்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தனலட்சுமி DL-47 லாட்டரி முடிவுகள் வெளியீடு: யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைத்தது?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?



Click it and Unblock the Notifications