ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பாகிஸ்தானை மட்டுமல்லாமல் உலகமே ஷாக் ஆகியிருக்கும் வேளையில் இரு நாடுகளின் பங்குச்சந்தை வர்த்தகமும இன்று வட துருவம், தென் துருவமாகியுள்ளது. ஆம் பாகிஸ்தான் பங்குச்சந்தை ரத்தக்களறியான நிலையில், இந்திய பங்குச்சந்தை உயர்வில் முடிந்தது.
பாகிஸ்தானின் முக்கிய பங்குச் சந்தை குறியீடான KSE-100, மே 7 அன்று 5.7 சதவீதம் வரை சரிந்து, 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. இந்த சரிவுக்கு முழுக்க முழுக்க காரணம் ஆபரேஷன் சிந்தூர்.

இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்திய ராணுவத் தாக்குதல்களை அடுத்து, பாகிஸ்தான் முதலீட்டாளர்கள் பீதியில் அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்ததால் இந்த சரிவு ஏற்பட்டது.
இன்று காலை வர்த்தகம் 5.7 சதவீதம் வரையில் சரிந்தாலும், மாலை வர்த்தகம் முடியும் நேரத்தில் பாகிஸ்தான் எதிர் தாக்குதல் நடத்தாது என்பதை பாகிஸ்தான் முதலீட்டாளர்கள் உணர்ந்த காரணத்தால் KSE 100 குறியீட்டின் இழப்பு 3 சதவீதமாக குறைந்தது. புவிசார் அரசியல் பதற்றங்கள் பங்குச் சந்தையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
பாகிஸ்தான் பங்குச் சந்தையில் தொடரும் சரிவு
ஏப்ரல் மாதத்தில் KSE-100 குறியீடு 6 சதவீதத்திற்கும் மேல் சரிந்து, ஆகஸ்ட் 2023க்குப் பிறகு மிக மோசமான மாதாந்திர சரிவை பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் முதல், KSE 100 குறியீடு 1.1 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு மாறாக, 2024ஆம் ஆண்டில் 86 சதவீதமும், 2023ஆம் ஆண்டில் 25 சதவீதமும் உயர்ந்து, பாகிஸ்தான் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு கணிசமான வருமானத்தை அளித்திருந்தது. ஆனால், தற்போதைய புவிசார் பதற்றங்கள் இந்த நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது.
கடந்த ஆண்டு, பாகிஸ்தானின் பங்குச் சந்தை 22 ஆண்டுகளில் மிக உயர்ந்த வருமானத்தை (86 சதவீதம்) அளித்து, உலகளாவிய முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இதன் மூலம் பிளாக்ராக் மற்றும் ஈட்டன் வான்ஸ் போன்ற முன்னணி முதலீட்டு நிறுவனங்கள், 50 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாகிஸ்தான் பங்குச் சந்தையில் தங்கள் முதலீடுகளை அதிகரித்தன.
இந்திய பங்குச் சந்தை உயர்வு
பாகிஸ்தான் பங்குச்சந்தைக்கு மாறாக, இந்தியாவின் பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50, மே 7 அன்று சந்தை தொடங்கியபோது சற்று சரிவில் துவங்கினாலும் சில மணிநேரத்தில் சரிவில் இருந்து முழுமையாக மீண்டது. BSE சென்செக்ஸ் 105.71 புள்ளிகள் (0.13 சதவீதம்) உயர்ந்து 80,746.78 புள்ளிகளில் முடிவடைந்தது. அதேபோல், நிஃப்டி 50 குறியீடு 34.80 புள்ளிகள் (0.14 சதவீதம்) உயர்ந்து 24,414.40 புள்ளிகளில் முடிவடைந்தது.
BSE-யில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் சந்தை மூலதனம் 1.44 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்து, மொத்தம் 423.50 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. ஆட்டோமொபைல் துறை பங்குகள் 1.7 சதவீதம் உயர்ந்து, சந்தை உயர்விற்கு முக்கிய காரணமாக அமைந்தன.
ஆட்டோமொபைல் துறையில் குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது நிறுவனத்தை இரண்டு தனித்தனி பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாக பிரிக்கும் திட்டத்திற்கு பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்ததை அடுத்து, 5.2 சதவீதம் உயர்ந்தது.
மேலும், இந்தியா-பிரிட்டன் இடையேயான முக்கியமான வர்த்தக ஒப்பந்தம், டாடா-வின் பிரிட்டிஷ் பிரிவான ஜாகுவார் லேண்ட் ரோவருக்கு (JLR) பயனளிக்கும் என்ற நம்பிக்கையும் டாடா மோட்டார்ஸ் பங்குகள் மீது முதலீட்டாளர்கள் அதிகப்படியான முதலீட்டை செய்தனர். இந்த ஒப்பந்தம் ஆட்டோமொபைல் மற்றும் டெக்ஸ்டைல் துறைகளுக்கு ஏற்றுமதி வாய்ப்புகளை மேம்படுத்தும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானின் பாகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள், இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன. இதன் விளைவாக, பாகிஸ்தான் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை விற்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தியாவில், இந்த நடவடிக்கைகள் பங்குச் சந்தையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் முன்னேற்றங்கள் சந்தையை நிலைப்படுத்தியுள்ளன. பாகிஸ்தானில், புவிசார் பதற்றங்கள் குறையும் வரை, பங்குச் சந்தையில் நிச்சயமற்ற தன்மை தொடர வாய்ப்புள்ளது.
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களை அனுமதிக்க ஈரான் விதித்த நிபந்தனைகள்..? உண்மை என்ன?

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்



Click it and Unblock the Notifications