இஸ்ரேல் தாக்குதல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு ஆதரவு வெளிப்படுத்தும் வகையில், பாகிஸ்தான் இடைக்காலப் பிரதமர் அன்வாருல் ஹக் கக்கர், நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை விதிப்பதாக வியாழக்கிழமை அறிவித்தார்.
2023 ஆம் ஆண்டு ஒவ்வொரு நாடும் பல விதமான பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் உலகம் முழுவதும் அதிகம் பேசப்பட்ட விஷயம் இஸ்ரேல் - பாலஸ்தீனம் ராணுவ தாக்குதல் தான். அதிலும் குறிப்பாக இஸ்ரேல் காசாவில் உள்ள மருத்துவமனையில் செய்யப்பட்ட தாக்குதல் உலக மக்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் கேர்டேக்கர் பிரதமரான அன்வாருல் ஹக் கக்கர் அந்நாட்டு மக்களுக்கு விடுத்த அறிவிப்பில், பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவை காட்டவும், புத்தாண்டில் நிதானத்தையும் பணிவையும் வெளிப்படுத்தவும் கக்கார் வலியுறுத்தினார்.
பாலஸ்தீனத்தில் நிலவும் மோசமான சூழ்நிலையை மனதில் வைத்து, நமது பாலஸ்தீன சகோதர சகோதரிகளுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதற்காக, புத்தாண்டுக்கான எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்தக் கூடாது. இதன் மூலம் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முழுத் தடையை அரசு விதிக்கிறது என இடைக்காலப் பிரதமர் அன்வாருல் ஹக் கக்கர் தெரிவித்தார்.
அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் நாட்டின் குண்டுவீச்சுத் தொடங்கியதில் இருந்து இதுவரை 21,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் வன்முறை மற்றும் அநீதியின் அனைத்து எல்லைகளையும் தாண்டி இஸ்ரேலியப் படைகளால் சுமார் 9,000 குழந்தைகள் கொல்லப்பட்டு உள்ளனர் என்றும் அன்வாருல் ஹக் கக்கர் தெரிவித்தார்.
காசா மற்றும் வெஸ்ட் பேங்க் பகுதியில் இஸ்ரேல் படைகள் அப்பாவிச் சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டது மற்றும் ஆயுதம் இல்லாமல் நின்ற பாலஸ்தீனிய மக்களைக் கொன்று குவித்து நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்து வேதனை தெரிவித்தார் அன்வாருல் ஹக் கக்கர்.
பாலஸ்தீன மக்களுக்கு இதுவரையில் இரண்டு முறை உதவிகளைப் பாகிஸ்தான் அனுப்பியதாகவும், மூன்றாவது உதவி தொகுப்பு தயாராகி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் பொருளாதாரம், வர்த்தகம் என அனைத்திலும் பின்தங்கியிருப்பது மட்டும் அல்லாமல் அந்நாட்டின் மக்கள் வறுமையில் தவிக்கும் நிலை புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை அறிவிப்பு கூடுதல் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications