டிசம்பர் 5 கெடு.. தட்டிதூக்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான்..!

பாகிஸ்தான் தனது பொருளாதாரத்தை வீழ்ச்சி அடையாமல் பாதுகாக்கப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கடன் வாங்கி வரும் நிலையில் இக்கடனுக்கான பேமெண்ட் டிசம்பர் 5 ஆம் தேதி செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

பாகிஸ்தான் நாட்டிற்குச் சமீபத்தில் IMF கடன் கொடுத்ததைத் தொடர்ந்து அந்நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் மட்டும் அல்லாமல் அந்நாட்டின் நிதிநிலையும் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டது.

இந்த நிலையில் டிசம்பர் 2 ஆம் தேதி செலுத்திய வேண்டிய பேமெண்ட் நிலை என்ன..?

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பாகிஸ்தானின் நாட்டின் மத்திய வங்கித் தலைவர் வெள்ளிக்கிழமை முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார். நிதிப் பற்றாக்குறையால் தவிக்கும் பாகிஸ்தான் நாடு சர்வதேசப் பத்திரத்திற்குச் செலுத்த வேண்டிய 1 பில்லியன் டாலர் அளவிலான தொகைக்குக் கடைசி நாள் டிசம்பர் 5.

டிசம்பர் 2

டிசம்பர் 2

இந்தத் தொகையைக் குறித்த தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு திருப்பிச் செலுத்தும் என்று கூறினார். அதாவது டிசம்பர் 2 ஆம் தேதியே 1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை அளிக்க உள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் (எஸ்பிபி) கவர்னர் ஜமீல் அஹ்மத் ஒரு முக்கியக் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

1.08 பில்லியன் டாலர் பேமெண்ட்

1.08 பில்லியன் டாலர் பேமெண்ட்

பாகிஸ்தான் அரசு சுமார் 1.08 பில்லியன் டாலர் அளவிலான பாண்டு ரீபேமெண்ட் டிசம்பர் 5 ஆம் தேதி முதிர்ச்சியடைகிறது. தற்போதைய பாகிஸ்தான் நிதிநிலையில், பொருளாதாரச் சிக்கல்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் இந்தப் பேமெண்ட் செலுத்த முடியாமல் மாடிக்கொள்ளும் எனப் பலராலும் கணிக்கப்பட்ட நிலையில் இத்தகைய செய்தி வெளியாகியுள்ளது.

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி


ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இருந்து அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை உடனடி நிதி வரவாகப் பலதரப்பு மற்றும் இருதரப்பு மூலங்கள் வாயிலாகச் சுமார 500 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான நிதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் (எஸ்பிபி) கவர்னர் ஜமீல் அஹ்மத் கூறியுள்ளார்.

ஜூன் 2023 இலக்கு

ஜூன் 2023 இலக்கு

ஜூன் 2023 நிதியாண்டின் இறுதிக்குள் பாகிஸ்தான் நாட்டின் நிதிநிலை மேம்படும், பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்குத் திரும்பும் எனவும், நாடு மிகவும் சிறந்த நிலையில் இருக்கும் என்றும் பாகிஸ்தான் நாட்டின் மத்திய வங்கி கவர்னர் ஜமீல் அஹ்மத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 பாக்கிஸ்தான் பொருளாதார நிலைமை

பாக்கிஸ்தான் பொருளாதார நிலைமை

பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை பலவீனமாக உள்ளது, மேலும் பேமெண்ட் பேலன்ஸ் ஆகியவை முக்கியக் கவலைகளாக அந்நாட்டின் அரசுக்கு நிலவுகிறது. அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதையும், வரி வருவாயை அதிகரிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லாதது பெரும் சுமையாக உள்ளது.

IMF கடன்

IMF கடன்

ஆகஸ்ட் மாதம் சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றப் அந்நாட்டிற்குச் சுமார் 1.1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை அளிக்க ஐஎம்எப் அனுமதித்தது.

சீனா, சவுதி அரேபியா கடனுதவி

சீனா, சவுதி அரேபியா கடனுதவி

இதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் பாகிஸ்தான், சீனாவிடம் இருந்து சுமார் 9 பில்லியன் டாலரும், சவுதி அரேபியா நாட்டில் இருந்து 4 பில்லியன் டாலர் அளவிலான தொகையைப் பெற உள்ளதாக இஷாக் டார் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் - சீனா

பாகிஸ்தான் - சீனா

பாகிஸ்தான் நாட்டின் வெளிநாட்டுக் கடனில் சுமார் 30 சதவீதம் சீனாவுக்குச் செலுத்த வேண்டியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் இதன் அளவு 27 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. சீனாவின் கடன் வலை மிகவும் மோசமானது என அனைவருக்கும் தெரிந்த நிலையிலும் பாகிஸ்தான் தொடர்ந்து சீனாவிடம் கடன் வாங்கி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+