பாகிஸ்தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக வன்முறை அபாயம் உள்ள பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இது ANI சுட்டி காட்டிய அறிக்கையின் படி, Early Warning Project-ன் சமீபத்திய அறிக்கையின் படி, பாகிஸ்தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
28 பக்கம் உள்ள இந்த அறிக்கையில், பாகிஸ்தான் (16.3%) பல்வேறு பாதுகாப்பற்ற பிரசனைகளை எதிர்கொண்டு வருகின்றது.
இரண்டாவது இடத்தில் மியான்மர்
குறிப்பாக மனித உரிமைகள் பாதிக்கின்றது. மனிதர்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர் என்று சுட்டிக் காட்டியுள்ளது.
ஆசியாவில் உள்ள மற்ற நாடுகளில் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு நாடான மியான்மர் (12.9%) இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளது.
ஏமனும் மூன்றாவது இடம்
ஏமன் (10.8%) மூன்றாவது இடத்திலும் இந்த வன்முறை அபாய பட்டியலில் உள்ளது. பாகிஸ்தானில் தொடர்ந்து தாலிபான் இயக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பேராளிகளால் நிகழ்த்தப்பட்ட பாரிய படுகொலைகள் நடந்து கொண்டிருப்பதால் ஆரம்ப எச்சரிக்கை திட்டம் தீர்ப்பளித்தது.
இந்தியா எந்த இடத்தில்?
4வது இடத்தில் சாட் (9.2%), 5வது இடத்தில் எத்தியோப்பியா நாடு 8.7% உடனும், 7.9% உடன் நைஜீரியா ஆறாவது இடத்திலும், ஏழாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் 7.7% உடனும், எட்டாவது இடத்தில் இந்தியா 7.4%மும், சூடான் 9வது இடத்தில் 7.3% ஆகவும், 10வது இடத்தில் சோமாலியா 6.9% உடன் உள்ளது.
சீனாவும் ஈரானும் எந்த இடத்தில்
இதில் சிரியா 6.4% உடன் 11வது இடத்தில், ஈராக் 6% உடன் 12 வது இடத்திலும் உள்ளது. இந்த பட்டியலில் சீனா 3.1% உடன் 23வது இடத்தில் உள்ளது. ஈரான் 30வது இடத்தில் 2.4% ஆகவும் உள்ளது.
பாகிஸ்தான் கடும் நெருக்கடி
பாகிஸ்தான் ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றது. குறிப்பாக சமீபத்தில் கடும் வெள்ளப் பெருக்கை கண்டுள்ளது. இதனால் கடுமையான சேதத்தினை எதிர்கொண்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. இது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நிலையில், அதற்கான ஐஎம்எஃப் முன் வந்தது.
பாகிஸ்தான் கடும் அதிருப்தி
எனினும் பாகிஸ்தானின் வரவு செலவு திட்டத்தில் திருப்தி இல்லாத நிலையில், இதற்கிடையில் பாகிஸ்தானிடம் கூடுதல் விளக்கங்களை ஐஎம்எஃப் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியம் மீது பாகிஸ்தான் அரசு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானின் நிதி அமைச்சர் முஹம்மது இஷாக் தர் சமீபத்தில், பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதற்காக ஐஎம் எஃப்-மிடம் கெஞ்சவில்லை. நிதியை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட முடியாது என அதிரடியான ஒரு கருத்தினை தெரிவித்து இருந்தார்.
எப்படி இருந்தாலும் சமாளிப்போம்
பணம் கிடைக்கவில்லை என்றாலும், நாங்கள் சமாளிப்போம். நிதி வழங்கவில்லை என்றாலும், பாகிஸ்தான் கவலைப்படவில்லை. ஆனால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தி, மக்கள் மீது அரசு சுமையை சுமத்த முடியாது என்று தெரிவித்தார். இது மேற்கொண்டு ஐஎம்எஃப் - பாகிஸ்தான் இடையே சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதுபோன்றதொரு அறிக்கையும் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

எல்பிஜி தட்டுப்பாட்டை சரி செய்ய அமெரிக்காவை நாடும் இந்தியா..!! நிலைமை எப்போது சீராகும்?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!



Click it and Unblock the Notifications