பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பல்வேறு அத்துமீறல்களை நிகழ்த்தி வருகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதம், அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைவது, டிரோன்களை அனுப்புவது என தொடர்ச்சியான தன்னுடைய வேலையை காட்டி வருகிறது.
ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் டிரோன்கள் வருவது குறைந்திருந்த நிலையில் மீண்டும் பழையபடி பாகிஸ்தானில் டிரோன்கள் அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எல்லை பாதுகாப்பு படை டிஐஜி ஏகே வித்யார்த்தி டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில் ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு டிரோன்கள் அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது ஆனால் தற்போது மீண்டும் பாகிஸ்தானில் இருந்து அதிக எண்ணிகையில் டிரோன்கள் இந்திய எல்லைக்குள் நுழைகின்றன என தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களும் போதை மருந்துகளும் இந்த டிரோன்கள் வழியாக இந்திய எல்லைக்குள் கொண்டுவரப்படுவதாக அவர் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார் . பாகிஸ்தானுடன் எல்லையை பகிரும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை நோக்கி இந்த டிரோன்கள் அதிக எண்ணிக்கையில் அனுப்பப்படுவதாக கூறுகிறார். இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் தற்போது இந்த டிரோன்கள் சர்வதேச எல்லையில் இருந்து 2 முதல் 2.5 கிலோமீட்டர் வரையிலான தொலைவுக்கு கூட இந்திய எல்லையில் நுழைகின்றன எனக் கூறுகிறார்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கூட பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தடைகளை மீறி டிரோன்களை அனுப்புகின்றனர் என அவர் தெரிவித்திருக்கிறார். தற்போது சீனாவை சேர்ந்த நவீன தொழில்நுட்பம் கொண்ட டிரோன்களை இவர்கள் பயன்படுத்துவது தெரிய வந்திருக்கிறதாம். இந்தியா ஏதேனும் டிரோன்கள் அத்துமீறி நுழைந்தால் அதனை கண்டறிவதற்கான அமைப்புகளை எல்லையில் நிறுவி இருக்கிறது.
இந்திய எல்லைக்குள் ஒரு ட்ரோன் நுழைகிறது என்றால் உடனடியாக இந்த அமைப்பு அந்த டிரோனுக்கு வரக்கூடிய அனைத்து சிக்னல்களையும் ஜாம் செய்துவிடும் . எனவே அந்த டிரோன் அதற்கு மேல் இயங்க முடியாது. தற்போது இந்தியாவின் இந்த டிரோன் கட்டுப்பாட்டு அமைப்பையும் மீறி செயல்படக்கூடிய வகையிலான சீனாவை சேர்ந்த நவீன டிரோன்களை பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர் என அந்த செய்தி குறிப்பிடுகிறது.
இந்தியாவிடம் சிக்காமல் தப்பிக்க வேண்டும் என்பதற்காக அதிக உயரத்தில் டிரோன்களை பறக்கச் செய்வதாகவும் இந்த டிரோன்கள் இந்திய எல்லைக்குள் வந்த உடன் தாழ் நிலைக்கு சென்று ஆயுதங்கள், போதை பொருட்களை மிகத் துல்லியமாக வீசி விட்டு செல்லக்கூடிய திறன் கொண்டவையாக இருக்கின்றன என்றும் தெரிய வருகிறது . 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் மட்டுமே பாகிஸ்தானிலிருந்து எல்லை தாண்டி பஞ்சாப் எல்லைக்குள் வந்த 100 டிரோன்களை எல்லை பாதுகாப்பு படையினர் பிடித்திருக்கின்றனர் கடந்த ஆண்டு மட்டும் பஞ்சாப் எல்லையில் 294 டிரோன்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டன.


Click it and Unblock the Notifications