பாகிஸ்தான் பாலைவனமாக மாறிவிடும்.. இந்தியா எடுக்க ஒற்றை முடிவு.. இவ்வளவு பெரிய பாதிப்பா..?

காஷ்மீர் தாக்குதலுக்குப் பின்பு இந்திய அரசு சிந்து நதி நீரைப் பாகிஸ்தானுக்கு விநியோகிப்பதை நிறுத்து முடிவு செய்யப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு பாகிஸ்தான் விவசாயிகளிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, 1960ஆம் ஆண்டு உலக வங்கியின் தலைமையில் இரு நாடுகளுக்கும் மத்தியிலே ஏற்பட்ட பேச்சுவார்த்தை மூலம் சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.

1960க்கு பின்பு, இந்தியா முதல் முறையாகச் சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை மீறி நிறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் 80 சதவீத விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக இருப்பது இந்த சிந்து நதி நீர் தான், தற்போது இதை நிறுத்தப்பட்டு உள்ளதால் இந்த நீர் வளத்தை நம்பியிருக்கும் விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

பாகிஸ்தான் பாலைவனமாக மாறிவிடும்.. இந்தியா எடுக்க ஒற்றை முடிவு.. இவ்வளவு பெரிய பாதிப்பா..?

பாகிஸ்தானின் தென்கிழக்கு சிந்து மாகாணத்தில் உள்ள லதிஃபாபாத் பகுதியில், சிந்து நதிக்கு அருகில் விவசாயம் செய்யும் 40 வயது விவசாயி ஹோம்லா தாக்கூர், தனது எதிர்காலம் குறித்தும், பாகிஸ்தான் விவசாயிகள் குறித்தும் பெரும் சோகத்தை ரெயூட்டர்ஸ் பத்திரிக்கையின் பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.

"சிந்து நதி நீர் விநியோகம் நிறுத்தப்பட்டால், இந்தப் பகுதி முழுவதும் தார் பாலைவனமாக மாறிவிடும். நாடு முழுவதும் இதனால் உணவுப் பொருட்கள் விநியோகம் பாதிக்கப்படும். நாங்கள் பசியால் இறந்துவிடுவோம்," என்று அவர் வேதனையுடன் கூறினார். மேலும் தனது 5 ஏக்கர் விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் தொலைவில் இருந்து ஒரு நீரோடையில் இருந்து கொண்டு வர வேண்டியுள்ளதாகவும் புலம்பியுள்ளார்.

1960ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சிந்து நதி மற்றும் அதன் துணை ஆறுகளின் நீரைப் பகிர்ந்து கொள்வதற்கான முக்கிய ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தானின் விவசாய நிலங்களில் 80 சதவீதத்திற்கு நீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டது.

ஆனால், காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்குப் பாகிஸ்தான் ஆதரவளித்ததாக இந்தியா குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியுள்ளது.

இந்திய அரசு கூறியுள்ளதன் படி, இந்த தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளில் இருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். "பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை முற்றிலும் கைவிடும் வரை இந்த ஒப்பந்தம் இடைநிறுத்தப்படும்," என்று இந்தியா அறிவித்துள்ளது.

இதற்குப் பதிலளித்த பாகிஸ்தான், தாக்குதலில் தனது பங்கு இல்லை என்று மறுத்துள்ளது. மேலும், "பாகிஸ்தானுக்கு உரிய நீரை தடுப்பது அல்லது திசை திருப்புவது போர் செயலாகக் கருதப்படும்," என்று எச்சரித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் - இந்தியா மத்தியில் பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாட்டின் முப்படைகளும் தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பாலைவனமாக மாறிவிடும்.. இந்தியா எடுக்க ஒற்றை முடிவு.. இவ்வளவு பெரிய பாதிப்பா..?

சிந்து நதியைச் சார்ந்து வாழும் பாகிஸ்தான் விவசாயிகள், இந்த முடிவால் தங்கள் வாழ்வாதாரம் அழியும் என்று அஞ்சுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மழைப்பொழிவு குறைவாக இருப்பதால், நதி நீரையே முழுமையாக நம்பியுள்ளனர். சிந்து மாகாணத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வல்லுநர்கள் இதே போன்ற நிலையைத் தான் ரெயூட்டர்ஸ் பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

சிந்து நதி, திபெத்தில் தோன்றி, இந்தியா வழியாகப் பாகிஸ்தானுக்குப் பாய்கிறது. நீர் விநியோகம் நிறுத்தப்பட்டால், இப்பகுதியில் விவசாயம் முற்றிலும் சாத்தியமற்றதாக மாறும் என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. சிந்து நதியைச் சார்ந்து நாட்டின் பெரும்பாலான விவசாய நிலங்கள் நீர்ப்பாசனம் செய்யப்படுகின்றன. நீர் விநியோகம் தடைப்பட்டால், உணவு உற்பத்தி குறைந்து, பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமாகலாம். இது, ஏற்கனவே பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்பது தான் தற்போதைய பிரச்சனை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+