இதமான பனி, லேசான தூறல். அதிகாலையில் வாக்கிங் செல்லலாம் என்று ஷூவை மாட்டிக் கொண்டு போகையில் இன்ஸ்டாகிராம் திறந்தால் பயங்கர ஷாக் ஆகிவிட்டது. ஒரு ஏழெட்டு வயசு இருக்கும் அந்தப் பொடியனுக்கு. சங்கிலியால் கட்டப்பட்ட புலியுடன் அந்தப் பொடியன் வீட்டின் ஹாலில் வாக்கிங் சென்று கொண்டிருந்தான்.
ஒரு டி-ஷர்ட், பேன்ட் போட்டுக் கொண்டு எந்தவித பயமும் இல்லாமல் எம் பேரு படையப்பா இளவட்ட நடையப்பா என்று ஸ்டைலாகப் பாடிக்கொண்டே தலைமுடியை கோதியபடி அந்தப் பொடியன் நடப்பது போலிருந்தது பார்ப்பதற்கு.

நாமெல்லாம் வாக்கிங் செல்லும்போது எதிரே ஏதாவது ஒரு நாய் நம்மை முறைத்துப் பாத்தாலே போதும் அள்ளு தெறித்துவிடும். மெதுவாக நின்று அந்த நாய் கடந்த போன பின்னாடி தான் உயிரே வரும். ஆனால் இந்தச் சின்னஞ்சிறு பயல் எப்படி புலியுடன் வாக்கிங் போகிறான். நெட்டிசன்களை தெரிக்கவிட்ட இந்த பொடியன் யார்..?
பாகிஸ்தானை சேர்ந்த பிரபல யூடியூபரான நௌமன் ஹாசன் என்பவர்தான் இந்த விடியோவை வெளியிட்டுள்ளார். 5 நாட்களுக்கு முன்பு வெளியிட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானவர்கள் பார்த்து தெறித்து விட்டனர்.
பயமே இல்லாமல் புலியை பிடித்துக் கொண்டு செல்லும் சிறுவனுக்கு ஒருபுறம் பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் என்னடா கிறுக்குப்பயலா இருக்க, சிறுபுள்ளத்தனமா குட்டிப்பையன் கையில புலியை மாட்டி விட்டிருக்க என்று சகட்டு மேனிக்கு நெட்டிசன்கள் யூடியூபர் ஹாசனை வறுத்து எடுத்து வருகின்றனர்.
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் பராமரிக்க முடியாமல் மூன்று சிங்கங்களையும் டஜன் கணக்கில் புலிகளையும் ஏலத்தில் அதிகாரிகள் விற்றுள்ளனர். அதில் சில புலிகளையும் சிங்கங்களையும் ஹாசன் வாங்கியுள்ளார். இதில் ஒரு புலிதான் அந்தச் சிறுவன் பிடித்துக் கொண்டிருப்பது. இந்தச் சிறுவன் ஹாசனின் மருமகன் என்று சொல்கின்றனர்.
வன விலங்குகளுக்கு சரியான அளவு உணவு, இறைச்சிகளை தரமுடியாமல் பாகிஸ்தான் அதிகாரிகள் திணறுகின்றனர். போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் வனவிலங்குகளை பராமரிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் விலங்குகள் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றன.

இந்நிலையில் இந்தப் பிரச்னையை கையிலெடுத்த நீதிமன்றம் பராமரிக்க முடியாத விலங்குகளை நிதி வசதி உள்ள பொது ஆர்வலர்கள், மக்களிடம் விற்றுவிடலாம் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பயங்கரமான இந்த விலங்குகளை அதிகாரிகள் ஏலத்தில் விற்று வருகின்றனர்.
இந்த கொடிய விலங்குகளை வாங்கி நல்ல நிலைமையில் பராமரித்து அதுபற்றிய வீடியோக்களை பொது ஆர்வலர்கள் வெளியிடுகின்றனர்.
ஹாசன் தான் வாங்கிய புலி மற்றும் சிங்கங்களை திரைப்படங்களுக்கு வாடகைக்கு விடுகிறார்.
அதுதவிர போட்டோ ஷூட் எடுத்துக் கொள்ளவும் கட்டணத்துக்காக தருகிறார். அப்படி ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் இதுபோன்ற வீடியோக்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஹேண்டிலில் ஹாசன் வெளியிட்டு அதிரடிக்கிறார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications