பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானுக்கும் அவரைப் போன்ற ஒரு தலைவர் தேவை என்று பாகிஸ்தானிய அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் கூறியுள்ளார். மோடியின் தேசப்பற்று முழக்கம் இந்தியாவில் உள்ள இந்தியர்களுக்கும், அமெரிக்காவில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இந்தியர்களுக்கும் நன்மை செய்கிறது என்றும் பால்டிமோரைச் சேர்ந்த பாகிஸ்தானிய-அமெரிக்க தொழிலதிபர் சஜித் தரார் கூறியுள்ளார்.
டிரம்ப் ஆதரவு குடியரசுக் கட்சித் தலைவரும், டொனால்ட் டிரம்பிற்கான அமெரிக்க முஸ்லிம்களின் நிறுவனருமான சஜித் தரார், மோடியின் கீழ் இந்தியா வளர்ச்சியடைந்துள்ளது என்றும், அவரைப் போன்ற ஒரு தலைவர் முன்னுக்கு வந்து பாகிஸ்தானுக்கு தலைமைப் பொறுப்பேற்றால் உதவியாக இருக்கும்.

ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது அந்த நாட்டில் உள்ளவர்களின் வளர்ச்சியில் மட்டுமின்றி அண்டை நாடுகளில் வசிக்கும் அந்நாட்டைச் சேர்ந்தவர்களின் வளர்ச்சியிலும் உள்ளது. இந்தியாவின் வெகுவான வளர்ச்சி அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்பம் சார்ந்த ஊழியர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கி உள்ளது.
இதனை உதாரணமாகக் கொண்டு இந்தியாவைப் போல் பாகிஸ்தானும் கற்றுக் கொள்ள வேண்டும். கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியாவின் முதல் கல்வித் துறை அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் மற்றும் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு போன்றவர்களின் முயற்சியால் கொண்டுவரப்பட்ட ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்கள் இந்தியாவுக்கு மிகப் பெரிய வளர்ச்சியைக் கொடுத்துள்ளன. நீண்ட கால வளர்ச்சிக்கு கல்வியில் முதலீடு செய்தால் என்ன வளர்ச்சி கிடைக்கும் என்பதற்கு இந்தியா ஒரு உதாரணம்.
அதன் பின் அமெரிக்க தேர்தல் குறித்து பேசிய தரார் அதிபர் தேர்தலுக்கான ட்ரம்பின் வேட்பு மனு, அமெரிக்காவை மீண்டும் நல்ல பாதையில் கொண்டு செல்வதற்காக தான். அரசியலில் நுழைவதற்கு முன்பே டொனால்ட் ட்ரம்ப் தனது பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்து விட்டார். இப்போது ட்ரம்ப் கவலைப்படுவது அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றிக்காட்டுவதற்காக மட்டுமே.
எங்கள் நாட்டில் அரசியல் ரீதியாக சில பிரச்சினைகள் நிலவுகிறது. பயங்கரவாதம் மற்றும் சட்ட சிக்கல்கள் சரி செய்ய வேண்டியுள்ளது. எங்கள் நாடு எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் ஒரு தலைவர் தேவை என்று தரார் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications