உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மட்டும் அல்லாமல் அனைத்து முக்கிய நாணயங்களின் மதிப்பும் தொடர்ந்து சரிந்து வருகிறது, இதேவேளையில் டாலரின் ஆதிக்கம் பல வருட உச்சத்தில் உள்ளது.
இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் நாட்டின் ரூபாய் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
மேலும் உலகிலேயே சிறந்து விளங்கும் நாணயம் என்ற அங்கீகாரத்தையும் பாகிஸ்தான் ரூபாய் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் ரூபாய்
அக்டோபர் 7 உடன் முடிந்த வாரத்தில் உலகளவில் பெரும்பாலான நாணயங்களின் மதிப்பு சரிந்த நிலையில், ஐஎம்எப் நிதியுதவி அளித்தும் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு இருக்கும் பாகிஸ்தான் நாட்டின் ரூபாய் உலகிலேயே சிறந்து விளங்கும் நாணயம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
அக்டோபர் 7
பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு அக்டோபர் 7 ஆம் தேதி உடன் முடிந்த வாரத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக 3.9 சதவீதம் அதிகரித்து 219.92 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் திடீர் உயர்வு அதிகப்படியான அன்னிய முதலீடுகள் குவிந்த காரணத்தால் ஏற்பட்டது எனத் தெரிய வந்துள்ளது.
புதிய நிதியமைச்சர்
பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் அந்நாட்டு அரசு செப்டம்பர் 28 ஆம் தேதி புதிய நிதியமைச்சராகப் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சியின் தலைவர் Ishaq Dar-ஐ புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் வந்த பின்பும் அன்னிய முதலீட்டிலும், ரூபாய் மதிப்பு வளர்ச்சியிலும் எவ்விதமான மாற்றமும் இல்லை.
தொடர் வளர்ச்சி
வெள்ளிக்கிழமை வரையில் சுமார் 11 நாட்களாகப் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. Ishaq Dar நியமனத்திற்குப் பின்பு அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தும் பழைய கொள்கையை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் பொருளாதாரம்
அமெரிக்க டாலருக்கு எதிராகப் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு ஜூலை மாதம் 240 ரூராய் வரையில் சரிந்தது, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு அதிகப்படியான சவால்கள் காத்திருக்கிறது. Ishaq Dar நியமனத்திற்கு முன்பு 15 நாளில் 12 சதவீதம் வரையிலான சரிவு பதிவானது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ரூபாய் மதிப்பு வரலாற்று சரிவு.. 100-ஐ தாண்டுமா.. இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் சவால்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications