நாளுக்கு நாள் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சி குறிப்பாக உள்கட்டமைப்பு மற்றும் கட்டண முறைகளில் சீனா பிற நாடுகளை விட முன்னணியில் இருக்கிறது. சமூக ஊடகத்தளங்களில் நாட்டின் புதுமையான அணுகுமுறைகளைக் காட்டும் வீடியோக்கள் நிறைந்துள்ளன. சமீபத்தில் பாகிஸ்தானை சேர்ந்த கன்டென்ட் கிரியேட்டரான ராணா ஹம்சா சைஃப் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தது. இது சீனாவின் ஆதீனவீன தொழில்நுட்பத்தை எடுத்துக்காட்டும் புதிய கட்டண முறையை படம் போட்டு காட்டியுள்ளது.
Zhuzhou என்ற இடத்தில் படமாக்கப்பட்ட வீடியோவில் ராணா ஹம்சா சைஃப் மற்றும் அவரது நண்பர்கள் குழு உள்ளூர் மளிகை கடைக்குச் செல்கிறது. அந்தக் கிளிப்பில் அவர்களுடைய நண்பர்களில் ஒருவர் உள்ளங்கையை பயன்படுத்தி பணம் செலுத்தி பொருட்களை வாங்குகிறார். இது குழுவில் உள்ள மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஒரு நபரின் உள்ளங்கை பதிவு செய்யப்பட்டால் அவர்கள் சீனாவில் எங்கு வேண்டுமானாலும் தங்கள் கையை அசைத்து பணம் செலுத்த முடியும் என்று சைஃப் கூறியுள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்த பலரும் தொழில்நுட்பத்தில் இந்த குறிப்பிடத்தக்க விஷயத்தை பாராட்டுகின்றனர். "சீனா 2050-ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறது" என்று போஸ்டுக்கு கேப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
சைஃப் பதிவிட்ட இந்த கிளிப் விரைவில் பலராலும் பகிரப்பட்டது. இன்ஸ்டாகிராமில் 9 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது. தொழில்நுட்பம் முன்னேற்றத்தினால் ஈர்க்கப்பட்ட உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களின் கருத்துக்கள் இந்த வீடியோவுக்கு வெள்ளமாக குவிந்து வருகின்றன.
இந்த வீடியோவுக்கு கருத்து தெரிவித்த ஒரு பார்வையாளர், "இதுதான் எதிர்காலம். எதிர்காலத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதை என்னால் நம்ப முடியவில்லை" என்று கருத்து தெரிவித்திருந்தார். மற்றொரு இன்ஸ்டாகிராம் பயனர், "தொழில்நுட்பத்தில் சீனா எப்போதும் ஒரு படி மேலே தான் இருக்கிறது. அப்பப்பா நம்ப முடியாத அமைப்பு, என்று கருத்து தெரிவித்திருந்தார். இன்னொரு பயனர் "இது வாழ்க்கையை மிகவும் எளிதாக்கும். இந்த சிஸ்டம் உலகம் முழுவதும் பரவும் என்று நான் நம்புகிறேன்", என்று கருத்து தெரிவித்திருந்தார்.

பாம் பேமெண்ட் தொழில்நுட்பம் (Palm Payment Technology) தொடர்பான வீடியோவை சைஃப் மட்டுமல்லாமல் இதற்கு முன்னர் RPG குழுமத்தின் தலைவரான ஹர்ஷ் கோயங்கா தனது X பதிவில் இதே போன்ற கிளிப்பை பகிர்ந்திருந்தார். சீனாவின் தொழில்நுட்பம் எவ்வாறு வாழ்க்கையை மாற்றுகிறது என்பதை விளக்குவதாக பகிர்ந்திருந்தார்.
அவரது வீடியோவில் பெய்ஜிங் சுரங்கப்பாதையில் உள்ளங்கையில் பணம் செலுத்தும் முறையைப் பயன்படுத்தி ஒரு பெண் தனது அனுபவத்தை விவரிக்கும் வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்தப் பெண் கூறுகையில், "சீனாவில் வசிக்கும் நான் QR குறியீடுகள் மற்றும் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணபரிவர்த்தனைக்கு பழகி விட்டேன். இப்போது நான் என் கைகளால் கூட பணம் செலுத்த முடியும் என்று கூறியிருந்தார்.
வீடியோவைப் பகிர்ந்த கோயங்கா, "தொழில்நுட்பம் தொடர்ந்து நம் வாழ்க்கையை எளிதாக்குகிறது" என்று எழுதியிருந்தார்.


Click it and Unblock the Notifications