மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக சீனா பல துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது, இந்த வளர்ச்சி தற்போது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்பது தான் பெரும் சோகமான விஷயம்.
பாகிஸ்தான் தற்போது பெரும் நிதி நெருக்கடியிலும், மோசமான பொருளாதாரத்திலும் உள்ளது அனைவருக்கும் தெரியும். அந்நாட்டின் பொருளாதாரத்தை திவால் ஆகாமல் தாங்கிப்பிடிக்க உலக வாங்கியின் உதவியை நாடி வருகிறது.

இப்படியிருக்கையில் சீனா தனது கடன் வலை திட்டத்தை பாகிஸ்தான் பக்கம் திருப்பியுள்ளது. சீனா பொருளாதாரத்தில் தடுமாறும் நாடுகளுக்கு காஸ்ட்லியான உள்கட்டமைப்பு திட்டத்தை குறைந்த விலையில் அளித்து, அதை கால தாமதம் செய்து பின்னாளில் அடுத்தடுத்து திட்டங்களை கைப்பற்றுவது வழக்கமாக கொண்டு உள்ளது. இதன் அடிப்படையில் ஏற்கனவே பாகிஸ்தானுக்கு பல வகையில் உதவிகளை செய்து வரும் சீனா தற்போது அந்நாட்டு ராணுவத்திற்கும் உதவி செய்ய முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான், சீனாவுடன் 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு மெகா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி சீனா, பாகிஸ்தானுக்கு 2028க்குள் 8 ஹாங்கோர் வகை நீர்மூழ்கி கப்பல்களை அளிக்க வேண்டும். இதில் முதல் நான்கு டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கி படகுகள் சீனாவில் முழுமையாக உருவாக்கப்படும். மீதமுள்ள நான்கு படகுகள் பாகிஸ்தானில் அசம்பிள் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கடற்படையில் முதல் சீன நீர்மூழ்கி கப்பல் 2026ல் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் இதை இந்தியாவுக்கு சீனா கொடுக்கும் நெருக்கடியாக விமர்சிக்கப்படுகிறது. ஏற்கனவே சீனா பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை கொடுத்துள்ள நிலையில் தற்போது போர் கப்பல்களை அளிக்க உள்ளது.
பாகிஸ்தான் கடற்படை தளபதி நவீத் அஷ்ரஃப், சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் 2028ஆம் ஆண்டுக்குள் 8 ஹாங்கோர் வகை நீர்மூழ்கி கப்பல்களை பெறும் ஒப்பந்தம் சுமூகமாக நடக்கிறது என்று கூறினார். இந்த படகுகள், வட அரபிய கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் பாகிஸ்தானின் கண்காணிப்பு திறனை மேம்படுத்தும் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications