துரந்தர் படத்தின் வசூலில் பங்கு கேட்கும் பாகிஸ்தான் மக்கள்!! இதென்ன புது பிரச்சினை!!

ரன்வீர் சிங், மாதவன், சாரா அர்ஜூன் ஆகியோரின் நடிப்பில் உருவாகி இந்தியா முழுவதும் பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது துரந்தர் திரைப்படம். கடந்த டிசம்பர் மாதம் துரந்தர் படத்தின் முதல் பாகம் வெளியானது. ரசிகர்கள் இதற்கு பெரிய வரவேற்பு தந்தனர். இதனை அடுத்து துரந்தர் படத்தின் இரண்டாம் பாகம் அண்மையில் வெளியானது.

துரந்தர் - தி ரிவெஞ்ச் என்ற பெயரில் வெளியான இந்த படம் 10 நாட்களிலேயே இந்தியாவில் 777 கோடி ரூபாயும் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் 1300 கோடி ரூபாயும் வசூல் செய்திருக்கிறது. இதில் ஹிந்தி பதிப்பு மட்டும் 58 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. தொடர்ந்து 11 வது நாளாக இந்த திரைப்படம் நாடு முழுவதும் 18 ஆயிரத்துக்கும் அதிகமான திரைகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. படம் வெளியாகி இத்தனை நாட்களுக்குப் பிறகும் தொடர்ந்து ரசிகர்கள் இந்த படத்தை வந்து ரசித்து செல்கிறார்கள்.

துரந்தர் படத்தின் வசூலில் பங்கு கேட்கும் பாகிஸ்தான் மக்கள்!! இதென்ன புது பிரச்சினை!!

ஆதித்ய தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி இருக்கக்கூடிய ஸ்பை த்ரில்லர் திரைப்படமான துரந்தர் வெளியான முதல் நான்கு நாட்களிலேயே 700 கோடிக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியது. இந்தி மொழியில் வெளியாகி முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் ஈட்டிய படம் என்ற பெருமையும் துரந்தர் படத்திற்கு கிடைத்தது.

பாகிஸ்தானின் கராத்தியை சேர்ந்த லயாரி என்ற பகுதியை அடிப்படையாகக் கொண்டு துரந்தர் படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் வசூலை வாரி குதித்து வரக்கூடிய சூழலில் பாகிஸ்தானின் லயாரி நகரை சேர்ந்த மக்கள் படத்தின் வசூலில் தங்களுக்கும் பங்கு தர வேண்டும் என கேட்டு இருக்கிறார்கள். கம்பேரிசன் டிவி என்ற இணைய பக்கத்தில் லயாரி பகுதியை சேர்ந்த மக்கள் அளித்துள்ள பேட்டி இடம் பெற்றுள்ளது.

அதில் உங்களுக்கு துரந்தர் திரைப்படத்தின் மூலம் 1000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது என்றால் லயாரி மக்களுக்கு நீங்கள் 500 கோடி ரூபாயை கொடுத்தாக வேண்டும் என கூறி இருக்கின்றனர். உங்களுக்கு வரக்கூடிய வசூலில் பாதி எங்களுக்கு கொடுத்தால் லயாரி பகுதியில் நல்ல சாலைகள் அமைக்கப்படும் குண்டும் குழியும் இல்லாத நல்ல சாலைகளில் எங்கள் பிள்ளைகள் வளர்வார்கள் என ஒரு நபர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

மற்றொரு நபர் லயாரி மற்றும் இங்க இருக்கக்கூடிய சூழலை மையப்படுத்தி தான் கதையை எடுத்து இருக்கிறார்கள். அது தான் அவர்களுக்கு வெற்றி தருகிறது என்றால் எங்களின் முன்னேற்றத்திற்கு பணம் தந்த அவர்கள் உதவலாமே என கூறியிருக்கிறார. மற்றொரு நபர் இந்த படத்தின் மூலம் லயாரி எப்படி இருக்கிறது என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+