பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் உள்ள குல்பெர்க் பகுதியில் தான் பெரும்பாலான பெரும் செல்வந்தர்கள் வசிக்கின்றனர்.
அவர்களது வீடுகள் எல்லாம் சகல வசதிகளையும் கொண்ட மாளிகைகளாகவும், அதில் சில வீடுகள் அரண்மனை போன்றும் அமைந்திருக்கும்.
சாமானியப்பட்டவர்களுக்கெல்லா இதுபோன்ற வீடுகள் எல்லாம் எட்டாக் கனிகளாகும். பாகிஸ்தானின் பிரபல தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப் பிரபலங்கள் எல்லாம் இங்குள்ள சொகுசு மாளிகைகளில் வசிக்கின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள மிகப் பெரிய ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனம் ஆடம்பரமான வசதிகள் கொண்ட ஒரு வீட்டை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ரூ.125 கோடிக்கு கட்டியுள்ளது. இதுதான் பாகிஸ்தானிலேயே விலை அதிகமான வீடு என்று கூறுகின்றனர்.
இந்த வீடு விலைபோனதா அல்லது இன்னும் காலியாக இருக்கிறதா என்ற தகவல் இல்லை. ஆனால் ஆசியாவின் டாப் பில்லியனர் முகேஷ் அம்பானியின் மும்பையில் உள்ள வீடான ரூ.15,000 கோடி மதிப்புள்ள அன்டீலியாவுக்கு நிகரானது என்று கூறுகின்றனர். அன்டீலியாவில் தான் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீத்தா அம்பானி, மகன்கள் ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, ஷ்லோகா மேத்தா ஆகியோர் வசிக்கின்றனர்.
புதுப்பிக்கப்பட்ட விஸ்தாரனமான பண்ணைகள் இஸ்லாமாபாதின் குல்பெர்க் பகுதியில் அமைந்துள்ளன. பரப்பளவு ஏறக்குறைய 6 ஏக்கர் இருக்கும். இங்குதான் பாகிஸ்தான் பண மதிப்பில் ரூ.125 கோடியிலான ராயல் பாலஸ் ஹவுஸ் அமைந்துள்ளது. இது சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது.
இந்த கம்பீரமான மாளிகையில் ஒரு அகலமான முகப்பு, அகன்ற மாடிவெளிகள், ஒரு கேரேஜ், ஒரு நீர்வீழ்ச்சியுடன் கூடிய புத்துணர்ச்சியூட்டும் நீச்சல் குளம், ஒரு உடற்பயிற்சி கூடம், ஒரு அதிநவீன திரையரங்கு, ஒரு வசதியான லவுஞ்ச் பகுதி மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது. மொத்தம் சுமார் 10 படுக்கையறைகள், 9 குளியலறைகள் உள்ளன. ஒவ்வொன்றும் மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சொகுசு வீடானது வீட்டைப் போன்று அல்லாமல் ஹோட்டலைப் போன்ற ஒரு சூழலை வழங்குகிறது.
இந்த மாளிகையில் ஏராளமான வாகன நிறுத்துமிடங்கள், அமெரிக்காவில் இருந்து கொண்டுவந்து நடப்பட்ட பனை மரங்கள், மொராக்கோவில் இருந்து வந்த ஆடம்பரமான ஒளி சரங்கள், நுழைவாயிலில் தாய்லாந்து நாட்டுப் பாணி நீர் நீரூற்றுகள் கொண்ட பசுமையான வெளிப்புறங்கள் உள்ளன.
எப்படி இருந்தாலும் பாகிஸ்தானின் மிக விலையுயர்ந்த குடியிருப்பான இந்த ராயல் பாலஸ் ஹவுஸ் நமது முகேஷ் அம்பானியின் ஆண்டிலியாவின் பிரமாண்டத்துக்குப் போட்டியாக ஆகாது. இருப்பினும் இது பிரமிக்க வைக்கும் அழகான வீடாக நிற்கிறது. ஏராளமான வசதிகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications