ஈரான் போர், உலகம் முழுவதுமே பரபரப்பாக பேசப்படக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. திடீரென பிப்ரவரி 28ஆம் தேதி அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. இந்த தாக்குதலில் ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்பை விட தீவிரமாகவும் உறுதியாகவும் இந்த முறை ஈரான் மீது தாக்குதல் நடத்தி கமேனியை படுகொலை செய்தன. பல முறை கமேனியை கொலை செய்ய முயற்சி செய்தும் அது பலன் தராமல் இந்த முறை மட்டும் எப்படி வெற்றி கிடைத்தது என்ற அனுமானங்கள் வழியாக தொடங்கி இருக்கின்றன. அதாவது ஈரான் போரில் அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் மறைமுகமாக உதவி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. அதற்கான ஆதாரங்களையும் ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர்.

ஈரானின் அண்டை நாடு பாகிஸ்தான். இரு நாடுகளும் 900 கிலோ மீட்டர் எல்லையை பகிர்கின்றன. அந்த வகையில் ஈரான் நாட்டு ராணுவத்தின் ஒவ்வொரு நகர்வையும் ஈரான் நாட்டிற்குள் என்ன மாதிரியான ஏவுகணைகள் ஆயுதங்கள் வருகை தருகின்றன என்பன உள்ளிட்ட முக்கியமான ரகசிய தகவல்களையும் கண்காணிக்க கூடிய வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருக்கிறது. எனவே பாகிஸ்தானின் உதவியோடு தான் அமெரிக்கா இந்த முறை களமிறங்கியதாக சொல்லப்படுகிறது.
பாகிஸ்தான் இந்த போரில் இரட்டை முகமாக இருப்பது வெளிவந்திருக்கிறது. ஒருபுறம் ஈரான் எங்களுடைய அண்டை நாடு, எங்களுடைய நட்பு நாடு எனக் கூறும் பாகிஸ்தான் அதே வேளையில் இந்த போரில் அமெரிக்காவுக்கு மறைமுக உதவி செய்திருக்கிறதாம். பாகிஸ்தான் அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து இரண்டு விதங்களில் பெரிய உதவிகளை பெறுகிறது. ஈரானி எதிரியான சவுதி அரேபியா பாகிஸ்தானுக்கு தேவையான எண்ணெய், நிதி உதவி ஆகியவற்றை வழங்கி வருகிறது.

அதே போல ஈரானின் மற்றொரு எதிரி நாடான அமெரிக்கா பாகிஸ்தானுக்கு நிதி ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் பல உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் பார்க்கும்போது ஒருபுறம் பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு கட்டுப்பட்ட நாடாக இருக்கிறது ஆனால் அதனை வெளிப்படையாக அறிவித்தால் ஈரானின் தாக்குதலுக்கு ஆளாக நேரம். அந்த வகையில் ஈரான் நட்பு நாடு என்ற அணுகுமுறையும் பின்பற்றிய வண்ணம் இருக்கிறது.
பாகிஸ்தான் மீது ஏன் திடீரென கவனம் திரும்புகிறது என்றால் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகவே பாகிஸ்தானோடு மிக நெருக்கம் காட்டி வருகிறார். இந்தியாவை கூட பகைத்துக் கொண்டார் ஆனால் பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டினார். குறிப்பாக பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் அமெரிக்க அதிபர் டிரம்பை நேரடியாக சந்தித்து பேசினார். அப்போது டிரம்ப் பாகிஸ்தானுக்கு ஈரான் குறித்து மிக நன்றாக தெரியும் என கூறியிருந்தார். இந்த ஸ்டேட்மெண்ட் தான் தற்போது பாகிஸ்தான் மீது அனைவரின் கவனமும் திரும்புவதற்கு வாய்ப்பாக இருக்கிறது.
பாகிஸ்தான் ஈரானுடன் 900 கிலோ மீட்டர் எல்லையை பகிர்கிறது ஈரானை எளிதாக உளவு பார்க்க பாகிஸ்தானால் முடியும். மேலும் ஈரானின் உளவு தகவல்களை பெறக்கூடிய நெட்வொர்க் பாகிஸ்தானிடம் இருக்கிறது. எனவே இவை எல்லாம் அமெரிக்க உளவுத்துறைக்கு மிக முக்கியமானதாக மாறியது. பாகிஸ்தான் நாட்டு எல்லையை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது என சொல்லப்படுகிறது. அதாவது உளவு விமானங்களை பாகிஸ்தான் எல்லையில் பறக்க செய்து ஈரானை உளவு பார்த்ததாக சொல்லப்படுகிறது. இந்த தகவல்கள் துல்லிய தாக்குதல் நடத்த உதவியதாம்.
பாகிஸ்தான் நிதி ரீதியாக அமெரிக்கா, சவுதியை சார்ந்திருப்பதால் அவர்களையும் பகைக்க முடியாது, அதே சமயம் ஈரானை விட்டு கொடுப்பதாக வெளிப்படையாக அறிவிப்பது தனக்குத்தானே தற்கொலை படை தாக்குதல் நடத்திக் கொள்வதற்கு சமம். எனவே பாகிஸ்தான் இந்த போரில் இரட்டை முகம் கொண்டிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!



Click it and Unblock the Notifications