இந்தியா பாகிஸ்தான் இடையிலான எல்லை பதற்றம் காரணமாக பாகிஸ்தான் பங்குச்சந்தை கடுமையாக வீழ்ச்சி அடையத் தொடங்கியதை அடுத்து அங்கு வர்த்தகமே நிறுத்தப்பட்டது.
பாகிஸ்தான் பங்குச்சந்தை வியாழக்கிழமை அன்று காலை வழக்கம் போல வர்த்தகம் தொடங்கியது. ஆனால் வர்த்தகம் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே அதன் பெஞ்ச்மார்க் குறியீடு KSE -30 , 7.2% வரை சரிவை கண்டது. இதனை அடுத்து வர்த்தகமே நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல் காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசியது. இதன் காரணமாக இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியிருக்கிறது . இந்த போர் பதற்றம் பாகிஸ்தான் பங்கு சந்தையில் கடுமையாக எதிரொலித்தது. பாகிஸ்தான் பங்குச்சந்தையில் வழக்கம் போல வர்த்தகம் தொடங்கியது ஆனால் ஒரு மணி நேரத்திலேயே பெஞ்சு மார்க் குறியீடுகளான KSE -30 , KSE -100 ஆகியவை சரிவடைந்ததால் உடனடியாக பங்கு வர்த்தகமே நிறுத்தப்பட்டது.
அதேவேளையில் இந்திய பங்குச் சந்தையை பொறுத்தவரை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சற்றே சரிவை கண்டு பின்னர் மீண்டும் உயர்ந்து வந்து வர்த்தகமாகின. கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் இறக்குமதி வரிகளை அறிவித்ததை அடுத்து பாகிஸ்தான் பங்குச்சந்தை பெஞ்ச் மார்க் குறியீடு 8,700 புள்ளிகள வரை சரிவை கண்டது. அப்பொழுதும் இதே போல வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டது.
நாளைய தினம் சர்வதேச நாணய நிதியும் பாகிஸ்தானுக்கு நிதி உதவிகளை நீட்டிப்பது தொடர்பான முடிவுகளை அறிவித்த இருப்பதால் நாளைய தினமும் பாகிஸ்தான் பங்குச்சந்தையில் பல்வேறு மாற்றங்களை காண முடியும் என சொல்லப்படுகிறது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல் காம் தாக்குதல் நடந்ததை அடுத்து KSE -30 இண்டெக்ஸ் 13 சதவீதமும் , KSE -100 இண்டெக்ஸ் 13 சதவீதமும் சரிவை கண்டிருக்கிறது. 2008ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக பாகிஸ்தான் பங்குச்சந்தை இந்த அளவு சரிவை சந்தித்துள்ளது.
காலையில் நிறுத்தி வைக்கப்பட்ட பங்குச்சந்தை வர்த்தகம் பிற்பகலில் மீண்டும் தொடங்கியது. KSE-100 இண்டெக்ஸ் பங்குச்சந்தை முடியும் போது 6 சதவீதம் சரிவடைந்து 107,007 புள்ளிகளாக இருந்தது. இந்திய ராணுவம் தன்னுடைய தாக்குதலை தொடரும் என்ற அச்சமே பாகிஸ்தான் பங்குச்சந்தை சரிவுக்கு காரணம் ஆகும்.


Click it and Unblock the Notifications