90-களில் வாழ்ந்தவர்கள் தங்களது வாழ்வின் பொற்கால நினைவுகளாகும், இன்றும் 90களில் பிறந்தவர்கள் கிட்ஸ்-களாகவே சுற்றுவதை பார்க்க முடியும்.
இந்த நிலையில் 90s கிட்ஸ் மறந்திடமுடியாத நினைவுகளில், இந்த பெட்டிகளை இனிப்பு வகைகள் மிகவும் முக்கியமானது. டைம் மெஷினில் பயணிப்பது போல் அந்த காலத்திற்கு விசிட் அடித்து விட முடியும். அப்போது கைச் செலவுக்காக வீட்டில் கொடுக்கும் மிகச் சொற்ப பணத்தை எடுத்துக் கொண்டு பள்ளிகளின் வெளியில் இருக்கும் பெட்டி கடைக்கு சென்றால் அத்தனை வகையான உணவு பண்டங்களை சுவைக்க முடியும்.
தற்போது நகரின் பரிணாம வளர்ச்சி காரணமாக இது போன்ற பெட்டி கடைகள் காணாமல் போய்விட்டன, இதனாலேயே அப்போது கிடைத்த பெரும்பாலான இனிப்பு வகைகள் மற்றும் விளையாட்டு பொருட்கள் காலப்போக்கில் கிடைக்காத பொருளாகிவிட்டன.
இதை அடிப்படையாக வைத்து சென்னையில் ஒரு அட்டகாசமாக கடை உருவாகியுள்ளது.
90s நினைவுகள்
இந்த காலத்திலும், பழைய 90s நினைவுகளுக்கு கூட்டிச் செல்லும் நோக்கில், இனிப்பு கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இங்கு சென்றாலே 90-க்களுக்கு சென்றுவிட முடியும். கடந்த இரண்டு ஆண்டுகளாக பாளையங்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணன் என்ற நபர் பாளையங்கோட்டை கோபால்சாமி கோயில் அருகில் இந்த கடையை நடத்தி வருகிறார்.
2K கிட்ஸ்
அனைவரும் வியக்கச் செய்யும் வகையில், 90களில் பிறந்தவர்கள் அதிகம் விரும்பும் மிட்டாய் கடையில் 90s கிட்ஸ் மட்டும் அல்லாமல் ஏராளமான 2K கிட்ஸ் வரிசையில் நின்றபடி தங்களுக்கு விருப்பமான இனிப்பு மற்றும் விளையாட்டு பொம்மைகளை வாங்கி வருகின்றனர்.
சிறிய பெட்டி கடை
அந்த காலத்தில் 90s கிட்ஸ் பள்ளிக்கு செல்லும் போது அருகாமையில் இருக்கும் அண்ணாச்சி கடை அல்லது சிறிய பெட்டி கடைகளில் 25 பைசா அல்லது 50 பைசாவுக்கு கை நிறைய சாக்லேட்களை வாங்கி சாப்பிட்டதை பலரும் இன்றும் மறக்க மாட்டார்கள்.
தேங்காய் மிட்டாய், தேன் மிட்டாய், அப்பளம்
"80 மற்றும் 90களில் மிகவும் பிரபலமாக ஏராளமான இனிப்பு வகைகள் இருந்தன. இவற்றில் தேங்காய் மிட்டாய், தேன் மிட்டாய், அப்பளம், மம்மி டாடி போன்றவை அனைவரின் ஃபேவரைட் ஆக இருந்தன. இனிப்பு வகைகள் மட்டுமின்றி ஏராளமான விளையாட்டு பொம்மைகளும் இந்த கடையில் விற்பனைக்கு கிடைக்கின்றன," என்று கடையை நடத்தி வரும் கிருஷ்ணன் தெரிவித்தார்.
இனிப்பு வகைகள்
இந்த கடைக்கு தினமும் வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருப்பதாக 2K கிட்ஸ் தெரிவிக்கின்றனர். "எனக்கு பிடித்த ஏராளமான இனிப்பு வகைகள் இங்கு கிடைக்கின்றன. 2K கிட்ஸ்-ஆன நாங்கள் இவற்றை விரும்ப தொடங்கி இருக்கின்றோம், 90களின் குழந்தைகள் மட்டுமே இவற்றை வாங்குவதில்லை. இந்த கடையில் ஏராளமான இனிப்பு வகைகள் கிடைக்கின்றன. மேலும் இவற்றின் விலையும் மிகவும் குறைவு தான்," என்று இங்கு வந்து செல்லும் சிறுவர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை அங்காடி
இதேபோன்று 2018 வாக்கில் சென்னை அங்காடி பெயரில் இதேபோன்ற 90s கிடஸ்-ஐ கவரும் வகையில் கடை திறக்கப்பட்டது. கடை துவங்கிய எட்டு மாதங்களில் இதனை மூடிய பாக்ஸர், மீண்டும் 2020 வாக்கில் இனிப்பு கடை மற்றும் நொறுக்குத் தீனி கடை ஒன்றை 90s கிட்ஸ்-ஐ கவரும் வகையில் திறந்தார்.
ஆன்லைன் வர்த்தகம்
இதுக்குறித்து பாஸ்கர் கூறுகையில் "ஊரடங்கு காரணமாக இதன் விற்பனையை சென்னையில் மட்டும் ஆன்லைனில் நடத்த துவங்கினேன். மிகவும் சிறிய காலக்கட்டத்தில் ஆயிரம் வாடிக்கையாளர்களை அடைந்துவிட்டோம். நான் அறிமுகம் செய்த 80s மற்றும் 90s கிட்ஸ் ஸ்பெஷல் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
சிறுவர்கள், பெரியவர்கள்
இந்த கடையில் சிறுவர்களுக்கு இணையாக பெரியவர்களும் மகிழ்ச்சியுடன் வருகின்றனர். இவ்வாறு இங்கு வருவோர் தங்களின் பழைய காலத்து அனுபவங்களை பகிர்ந்து கொள்வர்," என சென்னை அங்காடி இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்தி வரும் பாஸ்கர் தெரிவித்து இருக்கிறார்.
முகேஷ் அம்பானி
மக்களுக்கு எப்போது பழைய நினைவுகளை நினைவுகூர்வது விருப்பான ஒன்று, 90ஸ் கிட்ஸ் எப்படி இந்த மிட்டாய் கடைகள் கவர்ந்து இழுக்கிறதோ, அதே ஐடியாவை வைத்து தான் முகேஷ் அம்பானி nostalgic என்பதை அடிப்படையாக வைத்து Campa Cola-வை அறிமுகம் செய்து அசத்தி வருகிறார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications