இந்திய அரசு, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நடந்த மத்திய அமைச்சரவை பொருளாதார விவகாரக் குழு (CCEA) கூட்டத்தில், வருமான வரித்துறைக்கு ஒரு முக்கியமான தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ரூ.1,435 கோடி செலவில், பான் 2.0 திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டம், ஒவ்வொரு பான் கார்டுக்கும் QR கோடு சேர்த்து, தற்போதுள்ள பான் அமைப்பை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த டிஜிட்டல் மேம்பாடு பல்வேறு அரசு சேவைகளை எளிதாக்கி, வரி செலுத்துவோரின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தும் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

தற்போதுள்ள பான் கார்டுதாரர்கள் புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை என்றும் QR கோடு சேர்த்து இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், வெளிநாடு வாழ் இந்தியர்களும் (NRI) பயனடைவார்கள். வெளிநாடு வாழ் இந்தியர்களின் (NRI) வரி செலுத்துதல் மற்றும் நிதி நடவடிக்கைகளை எளிமைப்படுத்தும் வகையில், பான் 2.0 திட்டத்தை முன்கூட்டியே திட்டமிட்டு விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
NRIகளுக்கு இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்வது, சொத்து வாங்குவது மற்றும் முதலீடு செய்வது போன்ற பல்வேறு நிதி மற்றும் வரி தொடர்பான நடவடிக்கைகளுக்கு பான் கார்டு அவசியமாகும். இந்த நிலையில் NRIகள் எப்படி பான் கார்டு பெறுவது எப்படி என்பதை பார்ப்போம்.
NRIகள் படிவம் எண் 49A-ஐ சமர்ப்பித்து, தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணத்துடன் UTIITSL அல்லது Protean ( என்எஸ்டிஎல் இ-கவ்) ஆகியவற்றின் பான் விண்ணப்ப மையத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது ஐயூஐடிஎஸ்எல் அல்லது புரோட்டியன் (முன்னாள் என்எஸ்டிஎல் இ-கவ்) இணையதளம் மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்தியா டிஜிட்டல் மாற்றத்தை நோக்கிச் செல்லும் நிலையில், பான் 2.0 திட்டம் சரியான முடிவாக பார்க்கப்படுகிறது. இந்த நடைமுறைகளை எளிமைப்படுத்தி பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலம், இந்த திட்டம் NRIகள் இந்திய வரி அமைப்புடன் இணைவதையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதையும் எளிதாக்கும்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!



Click it and Unblock the Notifications