பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பொருளாதார விவகாரக் குழு (CCEA) வருமான வரித்துறைக்கு ஒரு முக்கியமான தொழில்நுட்ப மேம்படுத்தல் திட்டத்தை ஒப்புதல் அளித்தள்ளது. எங்கும் டிஜிட்டல், எதிலும் டிஜிட்டல் என இந்தியா மாறிக்கொண்டு இருக்கும் வேளையில் பான் கார்டில் மட்டும் இதுவரையில் எவ்விதமான மாற்றமும் செய்யப்படாமல் பல தசாப்தங்களாக அப்படியே இருக்கிறது.
இதேவேளையில் தற்போது பான் கார்டு மற்றும் பான் விபரம் பயன்படுத்தும் இடங்கள் அதிகரித்திருக்கும் வேளையில், டிஜிட்டல் இந்தியா திட்டத்துடன் இதனை இணைக்க ரூ.1,435 கோடி செலவில், பான் 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பான் 2.0 திட்டத்தில் என்ன இருக்கும்..?

பான் 2.0 திட்டம் மூலம், ஒவ்வொரு பான் கார்டுக்கும் QR கோடு சேர்த்து, தற்போதுள்ள பான் அமைப்பை நவீனமயமாக்க திட்டமிடப்பட்டு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த டிஜிட்டல் மேம்பாடு பல்வேறு அரசு சேவைகளை எளிதாக்கி, வரி செலுத்துவோரின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தும்.
பான் 2.0 திட்டம், பான் கார்டுகளை வழங்குதல் மற்றும் சரிபார்ப்பதில் என்ற முழு அமைப்பும் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அரசு வரி செலுத்துவோருக்கு ஒரு தடையற்ற டிஜிட்டல் அனுபவத்தை உருவாக்க இலகு செய்கிறது.
இப்புதிய QR code கொண்ட பான் கார்டு பெற மக்கள் செலவு செய்ய வேண்டுமா? தற்போது பான் கார்டு வைத்துள்ளவர்கள் புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை. QR கோடு சேர்த்து, புதிய பான் கார்டு இலவசமாக வழங்கப்படும்.
பான் 2.0 திட்டத்தின் கீழ் பான் கார்டு உரிமையாளர்கள் அனைவருக்கும் புதிய பான் கார்டை இலவசமாக அப்கிரேட் செய்து அளிக்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்னவ் தெரிவித்தார்.
வருமான வரித்துறை ஏற்கனவே 78 கோடி பான் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ள நிலையில், இதில் 98% பான் கார்டுகள் தனிநபர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. பான் 2.0 திட்டத்தின் பலன்களை பெற தற்போது பான் கார்டு வைத்திருப்பவர்களிடமிருந்து எந்த நடவடிக்கையும் இல்லாமல் மேம்பட்ட டிஜிட்டல் அனுபவத்தைத் தரப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.
PAN/TAN 1.0 எகோசிஸ்டத்தை மறு-வடிவமைப்பதன் மூலம் பான் 2.0 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போதைய அமைப்பின் அனைத்து செயல்பாடுகளையும் தக்க வைத்துக் கொண்டு, புதிய சேவைகள் இதனுடன் இணைக்கப்பட உள்ளது. இந்த QR கோடு மூலம் பல இடத்தில் வெறும் ஸ்கேனிங் வாயிலாகவே உறுதி செய்யப்படும், இதனால் பான் விபரத்தை உள்ளிடும் அவசியம் இருக்காது.


Click it and Unblock the Notifications