இந்தியாவினை பொறுத்தவரையில் ஆதார் பான் இல்லாவிட்டால், இன்றைய காலக்கட்டத்தில் நிதி ரீதியிலான எந்தவொரு சேவைகளையும் செய்ய முடியாது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களைத் தான் அரசு இணைக்க கூறி வருகின்றது.
ஏற்கனவே பலமுறை கால அவகாசம் கொடுத்தும் பலரும் இணைக்கவில்லை எனலாம். இந்த நிலையில் தான் தற்போது ஆதார் பான் இணைப்புக்கான கால அவகாசம் மீண்டும் மார்ச் 31, 2022 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதார் பான் இணைப்புக்கான கால அவகாசம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பே பலமுறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரூ.10,000 வரை அபராதம்
ஆக அரசின் இந்த காலக்கெடுவுக்குள் ஆதார் பான் இணைப்பு செய்யப்படாவிட்டால், 10,000 ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படலாம். ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் , மீண்டுமொரு முறை ஓமிக்ரான் காரணமாக அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
கட்டாயம் பான் எண் தேவை
இன்றைய காலகட்டங்களில் வங்கிகளில் 50,000 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்தால், கட்டாயம் பான் எண் அவசியமாகும். இதோடு வருமான வரி தாக்கலுக்கும் பான் எண் கட்டாயமாகும். அதோடு வங்கி கணக்குகளிலும் பான் எண் கட்டாயமாகும். அதோடு வருமான வரி தாக்கலிலும் கட்டாயமாகும். அதேபோல செலுத்தப்பட்ட வரியினை திரும்ப பெறும்போதும் அவசியமாகும்.
இது மட்டும் அல்ல பான் - ஆதார் உடன் இணைக்கப்படாத பான் எண் அபராதத்துடன் செல்லாததாகவும் ஆகிவிடும். ஆக இப்படி பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
எப்படி இணைக்கலாம்?
ஆதார் மற்றும் பான் எண்ணினை இணைக்க http://incometaxindiafiling.gov.in./ என்ற இணைய பக்கத்தில் சென்று இணைக்கலாம்.
இந்த இணைய பக்கத்திற்கு சென்று, வலைதளத்தின் இடது பக்கத்தில் உள்ள ஆதார் லிங்க் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
அதன் பின்பு உங்களின் பான் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்கும். அதில் உங்கள் பெயரினை பிழையில்லாமல் பதிவிட வேண்டும்.
இதனையடுத்து உங்கள் பிறந்த தேதி உள்ள ஒரு சிறிய டிக் பாக்ஸ் இருக்கும் அதனை க்ளிக் செய்ய வேண்டும்.
பிறகு அங்குள்ள captcha எண்ணினை பதிவு செய்து க்ளிக் செய்தால், பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும். இதனை பதிவு செய்த பின்னர் கடைசியாக லிங்க் ஆதார் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
SMS மூலம் இணைக்கலாம்
பான் எண்னை ஆதார் எண்ணுடன் மொபைல் எஸ்எம்எஸ் மூலமும் இணைக்கலாம்.
இதற்காக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இணைத்து கொள்ளலாம்.
மொபைல் எண்ணில் இருந்து UIDPAN 12 இலக்க ஆதார் எண் 10 இலக்க பான் நம்பரை டைப் செய்து மேற்கூறிய எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
இதெல்லாம் எனக்கு தெரியாது என கூறுபவர்கள் ஆதார் மையங்களிலும் சென்று இணைத்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications