உங்க ஆதார் பான் இணைச்சிட்டீங்களா..? உடனே செக் பண்ணுங்க.. ரூ.1000 அபராதம்..!

ஆதார் பான் இணைப்பு ஜூன் 30 ஆம் தேதி கடைசி நாள் என மத்திய நிதியமைச்சகம், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வாயிலாக அறிவித்துள்ளது. இதனால் கடைசி நேரத்தில் பலர் ஆதார் பான் எண்களை இணைக்க முந்தியடித்துக்கொண்டு செல்கின்றனர், இல்லையெனில் 1000 ரூபாய் தாமத கட்டணத்துடன் இணைக்க வேண்டும்.

ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படும் மோசமான விலைவாசி காலக்கட்டத்தில் 1000 ரூபாய் எவ்வளவு முக்கியம் என்பது எல்லோருக்கும் தெரியும். அரசின் அறிவிப்பின் படி இன்றைக்குள் ஆதார் பான் இணைப்பு செய்யப்படாவிட்டால், ஜூன் 30க்கு பிறகு 1000 ரூபாய் வரையில் கட்டணத்துடன் ஆதார் பான் இணைக்க வேண்டும்.

உங்க ஆதார் பான் இணைச்சிட்டீங்களா..? உடனே செக் பண்ணுங்க.. ரூ.1000 அபராதம்..!

ஜூன் 30 ஆம் தேதிக்குள் இணைக்கப்படாத பான் கார்டு அனைத்தும் ஜூலை 1 ஆம் தேதி முதல் செயல்படாது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பலருக்கும் தங்களுடைய பான் கார்ட் ஆதார் கார்டு இணைக்கப்பட்டு உள்ளதா..? இல்லையா என்ற சந்தேகம் வரும்.

ஆதார் பான் இணைப்பை செக் செய்வது எப்படி..? எளிதாக வீட்டில் இருந்துக்கொண்டே இணையம் வாயிலாக சில நிமிடத்தில் பான் எண் ஆதார் எண்-ஐ இணைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

படி 1: முதலில் வருமான வரித் தளத்திற்குச் செல்லுங்கள் https://www.incometaxindiaefiling.gov.in/home

படி 2: லாக்இன் செய்த பின்பு டேஷ்போர்டில் Profile Settings என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

படி 3: Profile Settings-ல் கடைசி ஆப்ஷனாக இருக்கும் Link Aadhaar என்பதைக் கிளிக் செய்யுங்கள்

படி 4: ஏற்கனவே உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு இருந்தால் Your Pan is Linked to Aadhaar Number XXXX XXXX 1234 என்ற செய்தி கிடைக்கும்.

படி 5: இல்லையெனில் ஆதார் பான் இணைப்பதற்கான ஆப்ஷன் வரும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+