ஆதார் மற்றும் பான் கார்டு தற்போது அனைத்துவிதமான அரசு சேவைகளுக்கும் முக்கியமான ஆவணமாக உள்ளது, வருமான வரி, அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்துவது முதல் கேஸ் சிலிண்டர், அரசு மானியம், அரசு உதவி தொகை வரையில் பல சேவைகளுக்கு அடிப்படையாக மாறியுள்ளது.
இந்த நிலையில் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு என்பது மத்திய அரசு பெரிய அளவிலான பலத்தை கொடுக்கும் என கூறுப்படுகிறது. மத்திய நிதியமைச்சகம் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்புக்கு அதிகப்படியான கால அவகாசம் அளிக்கப்படும் வேளையில், கடைசியாக ஜூன் 30 அதாவது இன்று ஆதார் மற்றும் பான் இணைப்புக்கு கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஆதார் - பான் இணைக்கப்படவிட்டால் என்னாகும்..?
ஜூலை 1 ஆம் தேதி முதல் உங்கள் பான் கார்டு செயலற்று போகும், இதனால் பான் கார்ட்-ஐ நீங்கள் பல்வேறு முக்கியமான காரணத்திற்காக பயன்படுத்த முடியாமல் போகலாம். உதாரணமாக கடந்த சில வருடங்களாக உங்கள் பெற்றோரின் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை, இப்போது தாக்கல் செய்ய நினைத்தால் கட்டாயம் செய்ய முடியாது. இதற்கு பான் - ஆதார் கட்டாயம் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
இதேபோல் கடந்த ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ததில் இருந்து உங்களுக்து வரி ரீபண்ட் தொகை திரும்ப பெற வேண்டுமாயின், ஆதார் - பான் இணைக்கப்படவிட்டால் இத்தொகையை திரும்ப பெற முடியாது.
மேலும் ஆதார் - பான் இணைக்கப்படவிட்டால் TDS வரி பிடித்தம் அதிகப்படியான அளவில் கழிக்கப்படும். இது குறைவான வருடாந்திர வருமானம் கொண்டவர்களுக்கும் பொருந்தும், அதிகப்படியான வரி பலகையில் வரி கழிக்கப்பட்டால் பெரிய நிதி இழப்பு ஏற்படும். TDS மட்டும் அல்லாமல் TCS வரியும் அதிகப்படியான அளவீட்டில் கழிக்கப்படும்.
வெறும் 5 நிமிடத்தில் செய்ய வேண்டிய வேலையை தவறவிடுவதால் 1000 ரூபாய் தாமத கட்டணமாகவும், பெரும் தொகையை வரியாகவும் இழக்க நேரிடும். இதனால் உடனே உங்கள் பான் கார்ட் - ஆதார் கார்ட்-ஐ இணைத்துவிடுங்கள்.


Click it and Unblock the Notifications