நிதி சார்ந்த மோசடிகளை கண்டுபிடிப்பதற்காகவும், தக்க நடவடிக்கை எடுப்பதற்காகவும் வருமானவரித்துறை பான் கார்டை வழங்குகிறது. டூப்ளிகேட் பான் கார்டுகளைப் பெற்று நிதி மோசடி செய்வதை தடுக்கும் வகையில் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று வரித்துறை பல ஆண்டுகளாக கூறி வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து வரி செலுத்துவோரும் கட்டாயம் இந்த செயல்முறையை முடித்திருக்க வேண்டும். இந்த வருடம் டிசம்பர் 31, 2024 வரை ஆதார் மற்றும் பான் கார்டை இணைப்பதற்கான காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
ஒருவேளை இந்த காலக்கெடுவுக்குப் பிறகும் இணைக்கவில்லை என்றால் அரசாங்கம் பான் கார்டை செயலிழக்கச் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக இந்த 2 முக்கிய ஆவணங்களையும் இலவசமாக இணைத்துக் கொள்ள மத்திய அரசு காலக்கெடு வழங்கி வந்தது.

ஆனால் அதையும் மீறி சிலர் இன்னும் தங்கள் பான் கார்டை இணைக்காமல் வைத்துள்ளனர். அப்படி இணைக்காத நபர்கள் 1000 ரூபாய் அபராதம் செலுத்தி டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் இணைத்துக் கொள்ளலாம். அதையும் மீறி இணைக்காமல் இருக்கும் நபர்களின் பான் கார்டு செயலிழக்கப்படும். பான் கார்டு செயலிழந்தால் எந்த நிதி சேவைகளுக்கும் அதை பயன்படுத்த முடியாமல் போகலாம்.
2024-ஆம் ஆண்டின் ஜனவரி 29-ஆம் தேதி நிலவரப்படி விளக்கு அளிக்கப்பட்ட பான் கார்டுகளைத் தவிர ஆதார் கார்டுடன் இணைக்கப்படாத பான் கார்டுகளின் எண்ணிக்கை 11.48 கோடி என்று பிப்ரவரியில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கச் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் இலவசமாக பான் கார்டு இணைப்பதற்கு பல்வேறு காலக்கெடு வழங்கப்பட்டதையும் பயன்படுத்தாத நபர்களுக்கு தான் இந்த 1000 ரூபாய் அபராதம். 2023 ஆம் ஆண்டின் ஜூன் 30-ஆம் தேதிக்கு பிறகு யாரெல்லாம் பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்கிறார்களோ? அவர்கள் அனைவரும் அபராதம் செலுத்த வேண்டும். 2023-ஆம் ஆண்டின் ஜூலை முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் ரூ.601.97 கோடி ரூபாய் பான் ஆதார் இணைக்காத நபர்களிடம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை இணைக்க அபராதம் செலுத்துவது எப்படி?
ஸ்டெப் 1: முதலில் வருமானவரித் துறையின் www.incometax.gov.in என்ற அதிகாரப்பூர்வ இ-ஃபைலிங் போர்ட்டலுக்குச் செல்லவும். ஹோம் பேஜில் "Quick Links" என்ற செக்ஷனை கிளிக் செய்யவும். இதற்கு மாற்றாக நீங்கள் போர்ட்டலில் உங்கள் சுயவிவரத்தில் இருக்கும் "Link Aadhaar" என்பதையும் தேர்ந்தெடுக்கலாம்.
ஸ்டெப் 2: உங்களுடைய பான் நம்பர் மற்றும் ஆதார் நம்பரை வழங்குங்கள்.
ஸ்டெப் 3: e-Pay Tax மூலம் பணம் செலுத்த "Continue" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: உங்களுடைய பான் கார்டு நம்பர் மற்றும் மொபைல் நம்பரை வழங்குங்கள். அந்த மொபைல் நம்பருக்கு தான் OTP அனுப்பப்படும் உங்கள் பான் கார்டுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை பயன்படுத்துவது அவசியம்.
ஸ்டெப் 5: OTP விவரங்களை வழங்கி முடித்த பிறகு, e-Pay Tax என்ற பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள். பின்னர் "Proceed" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 6: மதிப்பீட்டு ஆண்டை தேர்ந்தெடுத்து "Type of Payment" என்பதில் "Other Receipts (500)" என்பதை தேர்ந்தெடுத்து, "Continue" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 7: தேர்வு செய்தவுடன் தொகை தானாக நிரப்பப்படும். "Continue" என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு ஒரு செல்லான் உருவாக்கப்படும். அடுத்த திரையில் கட்டணம் செலுத்தும் முறையை தேர்ந்தெடுக்க வேண்டும். கட்டண முறையை தேர்ந்தெடுத்ததும் நீங்கள் பணம் செலுத்த கூடிய வங்கியின் இளையதளத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள். பணம் செலுத்தி செயல்முறையை முடிக்கவும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications