ஜூன் 30, 2023 வரை அதாவது இன்று இரவு வரையில் மட்டுமே பான் கார்டு ஆதார் கார்டுகளுடன் இணைக்கலாம். இப்படி இணைக்கப்படாத பான் கார்டு அனைத்தும் ஜூலை 1 ஆம் தேதி முதல் செயல்படாது என்று நிதி அமைச்சகம் மத்திய நேரடி வரி வாரியத்தின் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.
பான் கார்டு ஆதார் கார்டு உடன் இணைக்காவிடில் என்னவெல்லாம் பிரச்சனை வரும்? பான் எண் மற்றும் ஆதார் எண் உடன் இணைக்காவிடில் PAN எண்ணுக்கு எதிராக வரி பணம் திரும்பப் பெற முடியாது, PAN செயல்படாமல் இருக்கும் காலத்திற்கான அத்தகைய பணத்தைத் திரும்பப்பெறுவதற்கு வட்டி செலுத்தப்படாது, TDS மற்றும் TCS அதிக விகிதத்தில் கழிக்கப்படும்/சேகரிக்கப்படும்.

மேலும் செயலிழந்த பான் கார்டு-ஐ மீண்டும் இயக்க வேண்டுமெனில் 1000 ரூபாய் அபராதம் தொகை செலுத்தி செயலிழந்த 30 நாட்களுக்குள் இயக்க ஒரு வாய்ப்பு உள்ளது.
எஸ்எம்எஸ் மூலம் இணைப்பது எப்படி..?!
ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு UIDPAN என்ற பார்மெட்டில் எஸ்எம்எஸ் அனுப்பினால் போதுமானது. உதாரணமாக UIDPAN 123456789000 EPOPE1234E
மத்திய அரசு பான் மற்றும் ஆதார் எண் இணைக்க பல முறை கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், இன்றே கடைசி நாள். இதுவரையில் மத்திய அரசு காலநீட்டிப்புக்கான எந்த அறிவிப்புகளும் வெளியிடாத நிலையில் இனியும் கால நீட்டிப்பு இருக்க வாய்ப்புகள் குறைவு.
பான் மற்றும் ஆதார் எண் தற்போது அனைத்து சேவைகளுக்கும் முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. குறிப்பாக தனிநபர் வருமான வரி பிரிவில் பான் மற்றும் ஆதார் எண் இணைக்கப்படாவிடில் எதுவும் நடக்காது. எனவே பான் - ஆதார் இணைப்பு இன்றே முடித்துவிடுங்கள்.


Click it and Unblock the Notifications