பான் - ஆதார் இணைக்க ஜூன் 30 காலக்கெடு நீட்டிப்பு..!

பான் எண் எனப்படும் நிரந்தரக் கணக்கு எண் (பான்) அட்டை மற்றும் ஆதார் அட்டையை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில், ஜூலை 1, 2023 முதல் இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகள் செயலிழந்துவிடும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பான் - ஆதார் இணைக்க  ஜூன் 30 காலக்கெடு நீட்டிப்பு..!

மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆதார் - பான் இணைப்பிற்கு மார்ச் 31 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்ட நிலையில், வருமான வரி செலுத்துவோருக்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம் ஜூன் 30, 2023 வரை பான் கார்டு ஆதார் கார்டுகளுடன் இணைக்கலாம். இப்படி இணைக்கப்படாத பான் கார்டு அனைத்தும் ஜூலை 1 ஆம் தேதி முதல் செயல்படாது என்று நிதி அமைச்சகம் மத்திய நேரடி வரி வாரியத்தின் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

பான் எண் மற்றும் ஆதார் எண் உடன் இணைக்காவிடில் PAN எண்ணுக்கு எதிராக வரி பணம் திரும்பப் பெற முடியாது, PAN செயல்படாமல் இருக்கும் காலத்திற்கான அத்தகைய பணத்தைத் திரும்பப்பெறுவதற்கு வட்டி செலுத்தப்படாது, TDS மற்றும் TCS அதிக விகிதத்தில் கழிக்கப்படும்/சேகரிக்கப்படும்.

மேலும் செயலிழந்த பான் கார்டு-ஐ மீண்டும் இயக்க வேண்டுமெனில் 1000 ரூபாய் அபராதம் தொகை செலுத்தி செயலிழந்த 30 நாட்களுக்குள் இயக்க ஒரு வாய்ப்பு உள்ளது.

ஐடி சட்டம், 1961 இன் படி, அனைத்து பான் வைத்திருப்பவர்களும் தங்கள் பான் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். 31.3.23க்கு முன் ஆதார். 1.4.23 முதல், இணைக்கப்படாத PAN செயலிழக்கப்படும். இன்றே இணைக்கவும்! என வருமான வரித்துறை தெரிவித்திருந்து இதை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

பான் - ஆதார் இணைக்க  ஜூன் 30 காலக்கெடு நீட்டிப்பு..!

ஆதார் பான் இணைப்பை செக் செய்வது எப்படி..?

1. முதலில் வருமான வரித் தளத்திற்குச் செல்லுங்கள் https://www.incometaxindiaefiling.gov.in/home

2. லாக்இன் செய்த பின்பு டேஷ்போர்டில் Profile Settings என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

3. Profile Settings-ல் கடைசி ஆப்ஷனாக இருக்கும் Link Aadhaar என்பதைக் கிளிக் செய்யுங்கள்

4. ஏற்கனவே உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு இருந்தால் Your Pan is Linked to Aadhaar Number XXXX XXXX 1234 என்ற செய்தி கிடைக்கும்.

5. இல்லையெனில் ஆதார் பான் இணைப்பதற்கான ஆப்ஷன் வரும்.

பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும் எளிய வழிமுறை எது..?

1) வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலைத் திறக்கவும் - https://incometaxindiaefiling.gov.in/

2) இத்தளத்தில் நீங்கள் ஏற்கனவே ரிஜிஸ்டர் செய்யவில்லை என்றால், உடனே ரிஜிஸ்டர் செய்யுங்கள். ஓருவேளை செய்திருந்தால் உங்கள் PAN எண் தான் யூசர் ஐடியாக இருக்கும்.

3) யூசர் ஐடி, கடவுச்சொல் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு உள்நுழையவும்.

4) ஒரு பாப் அப் விண்டோ தோன்றும், உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும்படி கேட்கும். இல்லையெனில், மெனு பாரில் உள்ள 'Profile Settings' என்பதற்குச் சென்று, 'Link Aadhaar' என்பதைக் கிளிக் செய்யவும்.

5) PAN விவரங்களின்படி பெயர் பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற விவரங்கள் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கும்.

6) உங்கள் ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள பான் விவரங்களை திரையில் சரிபார்க்கவும். இதில் பொருத்தமின்மை இருந்தால், ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சரி செய்ய வேண்டும்.

7) விவரங்கள் பொருந்தினால், உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, "link now" பட்டனைக் கிளிக் செய்யவும்.

8) உங்கள் ஆதார் உங்கள் பான் எண்ணுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு பாப்-அப் செய்தி உங்களுக்குத் தெரிவிக்கும்.

9) உங்கள் PAN மற்றும் ஆதாரை இணைக்க நீங்கள் https://www.utiitsl.com/ அல்லது https://www.egov-nsdl.co.in/ ஐப் பார்வையிடலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+