இந்தியாவில் விரைவில் மிகப் பெரிய பான்கார்டு மோசடி வெளியாக உள்ளது. பல்வேறு பகுதிகளில் இதுபோன்று பான்கார்டு மோசடி நடந்துள்ளதாக புகார்கள் குவிந்துள்ளன.
வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் மும்பையைச் சேர்ந்த ஒரு மூத்த குடிமகளான லூப்னா காப்ளி என்பவர் தனது பான் கார்டு சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக புகார் செய்துள்ளார்.

2010-11 நிதியாண்டில் லூப்னா ரூ.1.3 கோடி அளவுக்கு சொத்தை விற்றதாக ஒரு வருமான வரி அதிகாரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவருக்கு வந்த வருமான வரி நோட்டீஸ் பற்றிய விவரங்கள் அவருக்குத் தெரியவில்லை. லூப்னா ஒரு புற்றுநோயாளி மற்றும் படிக்காதவர். இந்த நிலையில் வருமான வரி தீர்ப்பாய விசாரணையின் போது லூப்னாவின் வழக்குரைஞர் லூப்னாவின் பான் கார்டு முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு சொத்து பதிவு செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார்.
அந்த வருமான வரி அதிகாரி தனிப்பட்ட விசாரணை எதையும் செய்யவில்லை என்றும் சொத்து பதிவு பற்றிய விவரங்களையும் சேகரிக்கவில்லை என்று தீர்ப்பாயம் கூறியது. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை சார்பான விசாரணையை பதிவாளரிடம் இருந்து தொடங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது ஒரு சம்பவமல்லா. இந்தியா முழுவதும் இதுபோன்ற பல்வேறு இடங்களில் பான் கார்டு மோசடி நடைபெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்த உஷா சோனி என்பவர் ரூ.7.5 கோடிக்கான வருமான வரி நோட்டீஸை பெற்றுள்ளார்.
அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த நோட்டீஸ் வந்துள்ளது. இதேபோல் ராஜஸ்தானை சேர்ந்த நந்த் லால் என்ற சிறு வியாபாரிக்கு 12.2 கோடிக்கு நோட்டீஸ் வந்துள்ளதாக போலீஸில் புகார் வந்துள்ளது.
இறந்தவர்கள், மூத்த குடிமக்கள், விவசாயிகள், மாணவர்கள் பெயரில் இதுபோன்ற மோசடி நடைபெறுகிறது.
பான் கார்டு மூலம் மோசடி செய்வதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. தனி நபர்களின் வருமானத்துக்கு மேல் பல மடங்கு சொத்து சேகரித்துள்ளதாகக் கூறி நோட்டீஸ்கள் அனுப்பப்படுகின்றன.
பான் கார்டு விவரங்களை உச்சபட்ச பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும் என்ற நிலையில் நடைமுறையில் அப்படி இல்லாத சூழ்நிலை இருப்பதாக ஒரு சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் கூறியுள்ளார்.
தனிநபர்கள் தங்களது பான் கார்டு விவரங்களை யாருக்கும் பகிரக் கூடாது என்று மத்திய நேரடி வரி வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் 70 கோடி பேரிடம் பான் கார்டு உள்ளது. ஆதாருடன் இதை இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பான் கார்டு விவரங்கள் தவறாகப் பயன்படுத்துவது தடுக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. இருப்பினும் தொடர்ந்து இந்த மோசடி வருவதால் இதுகுறித்து போலீஸிடம் புகார் அளிக்கும்படி கூறப்பட்டுள்ளது.
பான் கார்டு வைத்திருப்பவர் இறந்தால் அவரது குடும்ப உறுப்பினர்கள் அல்லது சட்டப்பூர்வ வாரிசுகள் இறப்பை அதிகார வரம்புக்குட்பட்ட வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் (இ-போர்ட்டலில் உள்ள விவரங்கள்) மற்றும் பான் கார்டு, இறப்புச் சான்றிதழின் நகல்களை வழங்க வேண்டும். அதிகாரி பின்னர் பான் எண்ணுக்கு எதிராக மரணத்தைக் குறிப்பார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications