பான் விதிகள் 2026: இனி இந்த 7 பரிவர்த்தனைக்கு பான் தேவையில்லை! ஆனால் ஐடி துறை அங்க வச்சிருக்காங்க செக்!

நம் நாட்டில் இரண்டு முக்கியமான அடையாள ஆவணங்கள் முதன்மை வகிக்கின்றன. அவை பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு. அதுவும் வங்கி கணக்கு, சிறு சேமிப்பு கணக்கு திறக்க வேண்டும் என்றால் ஊழியர்கள் உங்களிடம் முதலில் பான் கார்டை தான் கேட்பார்கள். எனவே பான் கார்டு விதிகளில் எந்த மாற்றம் வந்தாலும் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். 2026 ஆம் ஆண்டில் வருமானவரித்துறை பான் கார்டு விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. சில தளர்வுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அது என்னென்ன மாற்றங்கள் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

கேஷ் டெபாசிட்: இதற்கு முன்பு ஒரு நாளில் நீங்கள் ரூ.50,000-த்திற்கு மேல் வாங்கிகளில் கேஷ் டெபாசிட் செய்தால், கண்டிப்பாக பான் கார்டு வழங்க வேண்டும். ஆனால் தற்போது இந்த விதி இல்லை. எனவே சிறு வியாபாரிகள், சுய தொழில் செய்பவர்கள் வங்கிக்கு சென்று டெபாசிட் செய்யும்போது பான் கார்டை வழங்க வேண்டிய அவசியம் இல்லை.

அதேபோல நீங்கள் வருடத்திற்கு ரூ.2.5 லட்சம் வரை டெபாசிட் செய்தால் அந்த கணக்கை வருமானவரித்துறைக்கு காண்பிக்க வேண்டும். ஆனால் இப்போது இந்த லிமிட் ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரூ.10 லட்சம் வரை கேஷ் டெபாசிட் செய்பவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது. டெபாசிட் செய்வதில் இருந்த கெடுபிடியை குறைத்திருக்கும் வருமானவரித்துறை, பணம் எடுப்பதில் ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. நீங்கள் 1 வருடத்திற்கு மொத்தம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் கேஷ்-ஆக எடுத்தால் கண்டிப்பாக பான் கார்டு ரிப்போர்ட்டிங் வரம்புக்குள் வந்து விடுவீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

பான் விதிகள் 2026: இனி இந்த 7 பரிவர்த்தனைக்கு பான் தேவையில்லை!

சொத்து பரிவர்த்தனை: 2026-ஆம் ஆண்டில் சொத்து வாங்கவோ அல்லது விற்கவோ முடிவு எடுத்திருந்தால் இந்த விதியை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் அசையா சொத்துக்களை வாங்குவதற்கும் விற்ப்பதற்கும் இதற்கு முன்னர் ரூ.10 லட்சம் வரையிலான தொகைக்கு பான் கார்டு கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது இந்த வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் ரூ.45 லட்சத்திற்கும் மேல் சொத்து பரிவர்த்தனை செய்யும் பட்சத்தில் கண்டிப்பாக பான் கார்டை வழங்க வேண்டும்.

வெளிநாட்டு பயணம்: வெளிநாட்டு பயணச் செலவுகள் செய்யும் போது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பான் கார்டை குறிப்பிடுவதற்கு இருந்த விதி நீக்கப்பட்டுள்ளது. தற்போது நீங்கள் ரூ.2 லட்சத்தை தாண்டி பரிவர்த்தனை செய்தால் மட்டும் தான் பான் விதிகளின் கீழ் கண்காணிக்கப்படுவீர்கள். அதாவது நீங்கள் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்து பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்றால் IT துறை உங்களைக் கண்காணிக்கும்.

கல்யாண மண்டபம், ஹோட்டல் பில்: ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்ட்களில் கேஷ் கொடுத்து உண்பதற்கான வரம்பு ரூ.50,000-த்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஹோட்டல் பில்லில் தளர்வுகள் இருந்தாலும், பெரிய பெரிய கல்யாண மண்டபங்களில் விசேஷம் வைத்து லட்சக்கணக்கில் கேஷ் கொடுக்கும் பட்சத்தில் பான் கார்டு விவரங்களை கண்டிப்பாக வழங்க வேண்டும். மேலும் கடுமையான சரிபார்ப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும்.

இன்சூரன்ஸ் பிரீமியம்: இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பான் கார்டு வைத்திருப்பவர்கள் வருடத்திற்கு ரூ. 5 லட்சத்திற்கு அதிகமாக இன்சூரன்ஸ் செலுத்தினால் அதை கண்டிப்பாக வருமானவரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். அதே நேரம் பான் கார்டு இல்லாதவர்கள் ரூ.2.5 லட்சத்திற்கு அதிகமாக இன்சூரன்ஸ் செலுத்தினாலே அந்தந்த நிறுவனங்களை அதை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

டூவீலர் ரூல்ஸ்: ரூ.5 இலட்சத்திற்கும் மேல் கார் அல்லது எந்த வாகனம் வாங்கினாலும் கண்டிப்பாக பான் கார்டை வழங்க வேண்டும். ஆனால் இப்போது புதிதாக டூவீலர் வாங்கும் போதும் பான் கார்டு வழங்குவது அவசியம். இதில் ஒரே ஒரு விஷயத்திற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நீங்கள் விவசாய பயன்பாட்டிற்காக ட்ராக்டர் வாங்கும்போது பான் கார்டு இல்லாமல் வாங்கலாம்.

புதிதாக களமிறங்கிய ஃபார்ம் 97: இதுவரையில் பான் கார்டு இல்லாதவர்கள் ஃபார்ம் 60 பயன்படுத்தி வந்தனர். ஆனால் இதற்கு பதில் இனி ஃபார்ம் 97-ஐ அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் ரூ. 45 லட்சத்திற்கும் அதிகமான பரிவர்த்தனை செய்யும் போது ஃபார்ம் 97-ஐ பயன்படுத்த முடியாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு கண்டிப்பாக பான் கார்டை வழங்கியாக வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+