அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனமான பானசோனிக்-ன் துணை நிறுவனமான 'ப்ளூ யோண்டர்' (Blue Yonder), இந்தியாவில் மூன்றாவது கிளை அலுவலகத்தை கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியில் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னிலை வகிக்கும் கோயம்புத்தூர், "தமிழ்நாட்டின் மான்செஸ்டர்" என்று அழைக்கப்படுகிறது. உற்பத்தி மட்டுமே சார்ந்து இருந்த நகரம் தற்போது ஐடி, சாப்ட்வேர் டெவலப்மென்ட், ப்ராடெக்ட் டெவலப்மென்ட் என கோவை வேலைவாய்ப்பு சந்தையும் பொருளாதாரமும் மாறி வருகிறது.

இங்கு ஏற்கனவே பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கிளை அலுவலகங்கள் இயங்கி வரும் வேளையில் புதிதாக வரும் நிறுவனங்களுக்காக நகரம் முழுவதும் டெக் பார்க், ஆபீஸ் ஸ்பேஸ் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
தற்போது, ப்ளூ யோண்டர் நிறுவனம் கோயம்புத்தூரில் கிளை அலுவலகம் அமைப்பது, தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சிக்கு முக்கிய உந்து சக்தியாக இருக்கிறது.
ப்ளூ யோண்டர் நிறுவனம் உலகளவில் பல நூறு நிறுவனங்களின் உலகளாவிய வர்த்தகத்திறகு Supply Chain Management பிரிவில் பல்வேறு மேம்பட்ட சேவைகளையும், தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனம் ஆகும். இதன் மென்பொருள் தீர்வுகள், நிறுவனங்கள் தங்களது சப்ளை செயின்-ஐ மேம்படுத்தவும், செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவுகின்றன.
கோயம்புத்தூரில் அமைக்கப்படும் புதிய கிளை அலுவலகம் எந்த வகையான பணிகளைக் கையாளும் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இது தமிழ்நாட்டில் உள்ள திறமையான ஐடி ஊழியர்களையும், ஐடி கட்டமைப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்து இந்தியாவில் 3 வது அலுவலகத்தை கோயம்புத்தூரில் திறந்துள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் ஈகாமர்ஸ் துறையை மேம்படுத்தும் பணிகளையும் ப்ளூ யோண்டர் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தனது இருப்பை விரிவாக்குவதில் ப்ளூ யோண்டர் ஆர்வமாக உள்ளது என்பதைக் கோயம்புத்தூரில் கிளை அலுவலகம் அமைப்பது காட்டுகிறது. இந்தியாவின் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம், உலகளவில் தனது வணிகத்தை விரிவுபடுத்த ப்ளூ யோண்டர் திட்டமிட்டுள்ளது.
ப்ளூ யோண்டர் நிறுவனம் கோயம்புத்தூரின் முக்கிய பகுதியான சரவணம்பட்டி கிளை அலுவலகம் அமைப்பது, தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறையில் ஒரு மைல் கல் ஆகும். இது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் மற்றும் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications