என்ன பெரிய ஐடி வேலை.. பானிபூரி விற்று ரூ.1.2 லட்சம் லாபம் பார்க்கும் நபர்..!!

பெரிய பெரிய கல்லூரிகளில் படிப்பை முடித்தவர்களே வேலைவாய்ப்பு கிடைக்காமலும் , குறைந்த ஊதியத்தில் வேலைக்கும் சென்று அல்லல் படுகின்றனர். இந்நிலையில் இங்கே ஒரு இளைஞர் பானிபூரி கடை போட்டு மாதம் 1.2 லட்சம் ரூபாய் லாபம் பார்ப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

Vaishnavi Srivastav என்ற ஒரு ஐஐடி மாணவி, தன்னுடைய நண்பர்களுடன் ஒரு பானிபூரி கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது வருமானத்தை கேட்டு ஆச்சர்யமடைந்து வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட அது வைரலாகி இருக்கிறது. அந்த வீடியோவில் இடம்பெறும் வியாபாரி தெருவோரத்தில் பானிபூரி கடை நடத்துகிறார். ஒரே ஒரு தள்ளுவண்டி ஸ்டால் மூலமாக மாதந்தோறும் 1.2 லட்சம் வரை லாபம் ஈட்டுவதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, அந்த வியாபாரி மஹிந்திரா ஸ்கார்பியோ கார் ஒன்றும் சொந்தமாக வைத்துள்ளார்.

என்ன பெரிய ஐடி வேலை.. பானிபூரி விற்று ரூ.1.2 லட்சம் லாபம் பார்க்கும் நபர்..!!

இந்த பானிபூரி கடை தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். அதாவது, நாளொன்றுக்கு வெறும் 6 மணி நேரம் மட்டுமே அவர் வேலை செய்கிறார். தினமும் சராசரியாக 80 முதல் 100 தட்டுகள் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் அவருக்கு தினசரி சுமார் 3,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. மாதத்திற்கு சுமார் 90,000 ரூபாய் முதல் 1.2 லட்சம் ரூபாய் வரை லாபம் வருகிறதாம்.இது மட்டுமில்லாமல் 4 இடங்களீல் அவர் பானிபூரி கடை நடத்துகிறாராம்.

இந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். ஒரு நபர் இவருடைய மாத வருமானம் நான் வாங்கும் CTC-ஐ விட அதிகம் என வியப்புடன் பதிவிட்டுள்ளார். மற்றொருவரோ, சாதாரண வியாபாரம் செய்பவர்கள் கடின உழைப்பின் மூலம் பெருமளவில் சம்பாதிக்க முடியும் என்பதை இது நிரூபிக்கிறது என பாராட்டியுள்ளார்.

Also Read

அலுவலக வேலைகளுக்கு பின்னால் ஓடுவதை காட்டிலும், சுயதொழிலில் அர்ப்பணிப்புடன் உழைத்தால் எந்தளவிற்கு முன்னேற முடியும் என்பதற்கு இந்த பானிபூரி வியாபாரியின் கதை சிறந்த உதாரணமாக பார்க்கப்படுகிறது.

Recommended For You

இந்த காலத்தில் வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக உள்ளது, அப்படியே கிடைத்தாலும் குறைந்த ஊதியமே கிடைக்கிறது. இந்த சூழலில் சுயதொழில் செய்தால் கடினமாக உழைத்தால் குறிப்பிட்ட காலத்திற்கு பின் சிறந்த லாபம் பார்க்க முடியும் என்பதையே இது காட்டுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+