பெங்களூர்: நான் சொல்லப்போவதை கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் அமேசானில் ஒரு பொருளை ஆர்டர் செய்து, அந்த ஆர்டர் இரண்டு நாட்களுக்குப் பிறகு உங்கள் வீட்டிற்கும் வந்து விடுகிறது. நீங்கள் அந்த பார்சலை திறந்து பார்க்கும் பொழுது ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக, பாம்பு இருந்தால் என்ன செய்வீர்கள்? இது போன்ற சம்பவம் பெங்களூரை சேர்ந்த தம்பதியினருக்கு நடந்துள்ளது.
இவர்கள் அமேசானில் எக்ஸ்பாக்ஸ் கண்ட்ரோலரை (xbox controller) ஆர்டர் செய்துள்ளனர். 2 நாட்களுக்குப் பிறகு அந்த ஆர்டரை நேரடியாக டெலிவரி செய்யும் நபரிடமிருந்து பெற்றுள்ளனர். அவர்கள் அந்த பார்சலை திறப்பதற்காக வீடியோ எடுத்து உள்ளனர். அவர்கள் அந்த பார்சலை திறக்கும் பொழுது ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக உயிருள்ள நாகப்பாம்பு இருந்துள்ளது. இதனைக் கண்ட அந்த தம்பதி அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுவரை பல இடங்களில் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக வேறொரு பொருள் மாற்றி அனுப்பியதாக கேள்விப்பட்டிருப்போம். முதன் முறையாக ஒரு உயிருள்ள பாம்பை மாற்றி அனுப்பியதாக கேள்விப்படுகிறோம். அந்த தம்பதி எங்களிடம் வீடியோ ஆதாரம் மற்றும் நேரில் பார்த்த ஆதாரமும் இருக்கிறது என்று இந்தியா டுடே பத்திரிக்கை நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.

இதற்கு அமேசான் நிறுவனத்தின் பதில்?: வாடிக்கையாளர்கள் பணத்தைத் திரும்பப் பெற்றதாகக் அமேசான் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் இந்த சம்பவம் அவர்களின் உயிருக்கு ஏற்படும் ஆபத்து குறித்து கேள்விகளை எழுப்பியது.
"நாங்கள் அந்தப் பொருளுக்கான முழு பணத்தைப் பெற்றோம்,ஆனால் அதிக விஷமுள்ள இந்த நாக பாம்பினால் எங்கள் உயிருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு என்ன செய்வீர்கள்? " என்று அந்த தம்பதி கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு முழு காரணம் அமேசானின் அலட்சியம் மற்றும் பாதுகாப்பு மீறல்கள், மோசமான போக்குவரத்து, சுகாதாரமற்ற ஸ்டோர் ஹவுஸ்(store house). ஒரு பொருளை ஆன்லைனில் ஆர்டர் செய்வது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றால், எங்கள் பாதுகாப்பிற்கு எங்கே செல்வது என்று அந்த தம்பதியினர் அச்சம் தெரிவித்துள்ளனர். பார்சலில் பாம்பு இருந்த வீடியோவை வலைதளத்தில் அந்த தம்பதி அப்லோட் செய்துள்ளனர். மேலும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பாதி திறக்கப்பட்ட அமேசான் பெட்டியின் பேக்கேஜிங் டேபில் சிக்கிய பாம்பு ஒன்று அசைந்து தப்பிக்க முயற்சிப்பத்தை பார்க்க முடியும்.
அவர்கள் முழு பணத்தையும் திரும்பப் பெற்றுள்ளனர், அவர்களிடம் அந்த பணத்தை திரும்பக் கொடுக்க வேண்டியது எங்களுடைய கடமை என்று அமேசான் கூறியுள்ளது. அவர்களுடைய இந்த சிரமத்திற்கு நாங்கள் வருத்தப்படுகிறோம் என்று கூறி அமேசான் தன் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது.
அமேசானில் ஒரு வாடிக்கையாளராக அல்லது ஒரு பணியாளராக அல்லது ஒரு டெலிவரை பாய்யாக இதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது. எல்லாவற்றையும் எளிதாக ஏற்றுக் கொள்ள முடியாது, இது ஒரு பாதுகாப்பு மீறலாகும்.நாங்கள் அனைத்து நேரத்திலும் நீங்கள் கூறுவதைக் கெட்டுக் கொண்டிருப்போம் என நினைக்காதீர்கள்" என்று ஒரு வாடிக்கையாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications