இந்திய வம்சாவளி சேர்ந்த பில்லியனர்களான பங்கஜ் ஆஸ்வால் மற்றும் அவருடைய மனைவி ராதிகா ஆஸ்வால் சமீபத்தில் உலகிலேயே காஸ்ட்லியான வீடுகளில் ஒன்றை சுவிட்சர்லாந்து நாட்டில் வாங்கியுள்ளார். இதன் மூலம் ஒட்டுமொத்த சுவிஸ் மக்களும் அதிர்ந்து போயுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் இந்திய மக்கள், இந்திய தொழிலதிபர் எண்ணிக்கை சற்று கூடுதல் என்றாலும் இதுவரையில் யாரும் இவ்வளவு காஸ்ட்லியான சொத்துக்களை வாங்கியது கிடையாது. இதனால் சுவிட்சர்லாந்து மக்கள் மட்டும் அல்லாமல் சுவிஸ்-ல் இருக்கும் பிற நாட்டு மக்களுக்கும் அதிர்ச்சி கலந்த வியப்பான சம்பவமாக உள்ளது.

சுவிட்சர்லாந்தில் பங்கஜ் ஓஸ்வால் மற்றும் ராதிகா ஓஸ்வால் வாங்கியுள்ள வீட்டு சுமார் 430000 சதுர அடி பரப்பளவு கொண்ட மாபெரும் வில்லா. இதன் விலை சுமார் 200 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் இது 1,649 கோடி ரூபாய்.
வில்லா வரி (Villa Vari) என பெயரிடப்பட்ட இந்த வில்லா ஜெனீவாவில் இருந்து வெறும் 15 நிமிட தொலைவில் உள்ளது. ஜிங்கின்ஸ் (Gingins) என்ற சுவிஸ் கிராமத்தில் வில்லா வரி அமைந்துள்ளது. இந்த வில்லா முதலில் 1902 ஆம் ஆண்டில் ஒரு பணக்கார சுவிஸ் தொழிலதிபரால் கட்டப்பட்டது, பின்னர் கிரேக்க கப்பல் அதிபர் அரிஸ்டாட்டில் ஓனாசிஸ் (Aristotle Onassis) வாங்கினார்.
பங்கஜ் ஓஸ்வால் மற்றும் ராதிகா ஓஸ்வால் கடந்த சில ஆண்டுகளாக இந்த வீட்டை வாங்கி புதுப்பித்து வந்த நிலையில் தற்போது குடிபெயர்ந்துள்ளனர். இந்த 1,649 கோடி ரூபாய் மதிப்பிலான வில்லாவில் இப்போது 12 பெட்ரூம், 17 பாத்ரூம், ஒரு நீச்சல் குளம், ஒரு டென்னிஸ் கோர்ட் மற்றும் ஹெலிபேட் ஆகியவை உள்ளன.
இது மட்டுமா இந்த வில்லாவில் ஒரு சிறிய சினிமா தியேட்டர், wine cellar அறை மற்றும் ஸ்பா ஆகியவையும் உள்ளது. இந்த பிரம்மாண்ட வீட்டை இன்டிரீயர் டிசைனிங்-ல் புகழ் பெற்ற ஜெஃப்ரி வில்க்ஸ் (Jeffrey Wilkes)இந்த வில்லா-வை புதுப்பிக்கும் பணியை செய்தார். இவர் ஓபராய் ராஜ்விலாஸ், ஓபராய் உதைவிலாஸ் மற்றும் லீலா ஹோட்டல்கள் போன்ற புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் சொத்துக்களில் இன்டிரீயர் டிசைனிங் செய்தவர்.
பங்கஜ் ஓஸ்வால் மற்றும் ராதிகா ஓஸ்வால்-ன் சொத்து மதிப்பு 3 பில்லியன் டாலர். பங்கஜ் ஓஸ்வால் மறைந்த தொழிலதிபர் அபய் குமார் ஓஸ்வாலின் மகன் ஆவார். அபய் குமார் ஓஸ்வால் ஓஸ்வால் அக்ரோ மில்ஸ் மற்றும் ஓஸ்வால் கிரீன்டெக் நிறுவனங்களை நிறுவியவர். 2016ல் இவருடைய மறைவிற்கு பின்பு பங்கஜ் ஓஸ்வால் கட்டுப்பாட்டுக்கு வந்த ஓஸ்வால் குரூப் குளோபல் தற்போது பெட்ரோ கெமிக்கல்ஸ், ரியல் எஸ்டேட், உரங்கள் மற்றும் சுரங்கத் துறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications