இந்தியாவில் வெற்றிகரமான தொடக்க வணிகங்களுக்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஆனால், தந்தையால் வளர்க்கப்பட்ட நிறுவனம், மகளால் பெரிய அளவில் வளர்க்கப்பட்டதற்கு ஒரு சில உதாரணங்கள் மட்டுமே உள்ளன. அத்தகைய தந்தை-மகள் வெற்றிக் கதையில் ஒன்றுதான் இங்கே நடந்துள்ளது. ஆம், இங்கே சிறிய பால் பண்ணையாக இருந்த நிறுவனத்தை 2000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நிறுவனமாக மாற்றிய ஒரு மகளின் வெற்றிக்கதைதான் இது.
ஒரு காலத்தில் சிறிய பால் பண்ணையாக இருந்த இந்த நிறுவனம் தற்போது தரமான பால், தயிர் பால் பொருட்களுக்கு பெயர் பெற்றுள்ளது. அந்த நிறுவனம்தான் பராக் மில்க் ஃபுட்ஸ் லிமிடெட் (Parag Milk Foods). இது தற்போது மொத்தமாக ரூ.2556 கோடி மதிப்பீட்டை கொண்ட ஒரு உற்பத்தி நிறுவனமாக உள்ளது. இந்தியா எப்போதும் அதன் பல வணிக வெற்றிகளுக்கு மிகவும் பிரபலமானது. குடும்பத் தொழில்கள் புதிய தலைமுறைகளால் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லப்படுவதை நாம் அடிக்கடி பார்த்திருக்கிறோம். ஆனால் அப்படிப்பட்ட ஒரு வெற்றிக் கதை இன்று இந்தியாவில் எதிரொலிக்கிறது.

அக்சாலி ஷா (Akshali Shah) என்பவர், தனது தந்தையின் பால் வியாபாரத்தை ஒரு புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்ற பெருமைக்குரியவர். ஆம், அவரது முயற்சியால், பராக் மில்க் ஃபுட்ஸ் லிமிடெட் ஒரு பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. ஒரு சிறிய பால் பண்ணையாக இருந்த இந்த நிறுவனம் தற்போது நல்ல பால் மற்றும் நெய்க்கு பெயர் பெற்று விளங்குகிறது. இப்போது பராக் மில்க் ஃபுட்ஸ் லிமிடெட் ரூ.2,556 கோடி மதிப்புள்ள பால் உற்பத்தி நிறுவனமாக மாறியுள்ளது.
தந்தையின் சிறு தொழிலை பெரிய அளவில் உயர்த்தியவர் அக்சாலி
அக்சாலி ஷா என்பவர் ஒரு தொழிலதிபர். தன் தந்தை தொடங்கிய சிறுதொழிலை தற்போது வெற்றியின் உச்சிக்கு கொண்டு சென்றவர்.கடந்த 2010 ஆம் ஆண்டில், அக்சாலி தனது தந்தையின் பிசினஸில் ஒரு நிர்வாகப் பயிற்சியாளராகச் சேர்ந்தார். நிறுவனரின் மகள் என்பதால் அவர் உயர்பதவிக்கு சென்றிருக்கலாம் ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. வணிகத்தின் கீழ்நிலை செயல்பாடுகளை நேரடியாகப் புரிந்துகொள்வதே நோக்கமாக வைத்து இருந்தார். அவரது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் அவர் படிப்படியாக முன்னேற்றியுள்ளது.
ஆம், இப்போது, 33 வயதில், அக்சாலி ஷா பராக் மில்க் ஃபுட்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநராக உள்ளார். விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலில் நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவை வளர்ப்பதிலும், நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவை ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷன் பிராண்ட் பிரைட் ஆஃப் கவ்ஸ் மற்றும் அவதார் போன்ற உயர் மதிப்பு தயாரிப்பு வரிசைகளாக வளர்ப்பதிலும் அவர் முக்கிய பங்காற்றுகிறார். இன்று பராக் பால் தயாரிப்புகள் இந்தியாவின் சிறந்த பால் புரத உற்பத்தியாளர்களில் ஒன்றாகும்.
அக்சாலி ஷாவின் தந்தை 1992 இல் ஒரு சிறிய பால் பண்ணையில் இருந்து தொழில்துறையில் நுழைந்தார். அக்சாலியின் தந்தை தேவேந்திர ஷா 1992 ஆம் ஆண்டு புனேவில் உள்ள மஞ்சரில், சிறிய பால் பண்ணை யூனிட்டாக ஆரம்பித்த இந்தத் தொழிலை இன்று பராக் பால் என்ற பெயரில் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக வளர்ந்துள்ளது. முன்னதாக, பராக் கோவர்தன் மற்றும் கோ போன்ற பிராண்டுகளின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார். பராக் என்பது நாட்டின் பல வீடுகளில் வீட்டுப் பெயராக உள்ளது. இது சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது. போர்ட்ஃபோலியோ வேகமாக வளர்ந்ததால், தேவேந்திர ஷாவின் மகள் அக்சாலி ஷாவின் பாரம்பரியத்தை நவீன நுட்பங்களுடன் இணைப்பதற்கான சோதனைகளால் நிறுவனம் அதிக உயரத்திற்கு வளர வழிவகுத்தது.
அக்சாலி ஷாவின் பின்னணி என்ன?
அக்சாலி ஷா எஸ்பி ஜெயின் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர். அவருக்கு சுமார் 14 வருட தொழில் அனுபவம் உள்ளது. நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்துவதில் அவரது பங்கு மிகப்பெரியது. அவரது சிறப்பான பிசினஸ் மனநிலை பராக் பால் உணவுகள் பெரிய அளவிலான சந்தையாக வளர உதவியது. அவரது தலைமையில்தான் தற்போது நிறுவனம் புதிய வளர்ச்சிக் கட்டத்தை எட்டியது.

பராக் மில்க் ஃபுட்ஸ் தற்போது ரூ.2,211 கோடி சந்தை மூலதனத்தைக் கொண்ட நிறுவனமாக மாறியுள்ளது. இது புதுமைகளை உருவாக்கி நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்வதில் வெற்றி பெற்றுள்ளது. இந்த பிரிவில் உள்ள மற்ற நிறுவனங்கள் பெரிய லாபத்தை இலக்காகக் கொண்டாலும், பயனர்களை கவர நிறுவனம் விலை நிர்ணய உத்தியைப் பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் நிறுவனத்திற்கு 2,556 கோடி ரூபாய் மதிப்பு கிடைத்துள்ளது. அதேபோல், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் பங்கின் விலை ரூ.181 என்ற அளவில் உள்ளது. இன்று, அக்சாலி இந்தியாவில் வளர்ந்து வரும் இளம் வணிக அடையாளமாக மாறியுள்ளார். இதுபோன்றே புதுமைகளை புகுத்தி இளம் தலைமுறையினர் முயற்சியில் அனைத்து பிசினஸ்களும் வளர்ச்சி அடைந்தால் இந்தியா விரைவில் மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும் என்பதில் மாற்று கருத்தில்லை.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications