மிஸ்டர் அம்பானி எங்களையும் வாங்கிக்கோங்க ப்ளீஸ்.. இருக்கிற பிரச்சனை தெரியாம Paramount வருகிறது..!!

சென்னை: இந்திய மீடியா துறையை இனி முகேஷ் அம்பானி தான் கட்டியாளும் வெற்றி கூட்டணியாக ரிலையன்ஸ் - வயாகாம்18 - டிஸ்னி இந்தியா 8.5 பில்லியன் டாலர் சாம்ராஜ்ஜியமாக விளங்குவது மட்டும் அல்லாமல் 120 டிவி சேனல்கள் மற்றும் 2 மாபெரும் ஸ்ட்ரீமிங் தளங்கள் உடன் சந்தை பங்கீட்டில் ஆதிக்கம் செலுத்தப்போகிறது.

ஆனால் இதில் மோனோபோலி பிரச்சனை இருக்கும் காரணத்தால் CCI அமைப்பு இதற்கு ஒப்புதல் அளிக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கும் வேளையில், முகேஷ் அம்பானியைத் தேடி ஒரு முன்னணி நிறுவனம் வந்துள்ளது.

மிஸ்டர் அம்பானி எங்களையும் வாங்கிக்கோங்க ப்ளீஸ்.. இருக்கிற பிரச்சனை தெரியாம Paramount வருகிறது..!!

பரமவுண்ட் குளோபல்: அமெரிக்க மீடியா நிறுவனமான பரமவுண்ட் குளோபல் நிறுவனம், இந்தியாவில் உள்ள தனது கூட்டணி மீடியா நிறுவனத்தின் பங்குகளை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வயாகாம்18 பங்குகள் விற்பனை: இந்தியாவில் இயங்கி வரும் வயாகாம்18 நிறுவனம் 3 நிறுவனங்களின் கூட்டணி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு சொந்தமான TV18, பரமவுண்ட் குளோபல், போதி ட்ரி சிஸ்டமஸ். இந்த நிலையில் வயாகாம்18 நிறுவனத்தில் பரமவுண்ட் குளோபல் தனது பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டு உள்ளது. வயாகாம்18 நிறுவனத்தில் பரமவுண்ட் குளோபல் சுமார் 13.01 சதவீத பங்குகளை வைத்துள்ளது.

கடன் குறைப்புக்காக விற்பனை: ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, பரமவுண்ட் நிறுவனம், வயாகாம்18 கூட்டணியில் இருக்கும் தனது பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், சுமார் 550 மில்லியன் டாலர் அதாவது 4,555 கோடி ரூபாயைத் திரட்ட முடியும். இதனைக் கடன் குறைப்புக்காக நிறுவனம் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

வெற்றி-க்கு வாய்ப்புகள் குறைவு: இந்த பேச்சுவார்த்தைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன, ஆனால் இந்த அதிகப்படியான விலையில் ஒப்பந்தம் நடைப்பெறுமான என்பது சந்தேகம் தான். மேலும் வயாகாம்18 நிறுவனத்திலும் சரி, தற்போது டிஸ்னி உடனான கூட்டணியிலும் சரி முகேஷ் அம்பானி தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

ஐபிஎல் ஸ்ட்ரீமிங் உரிமை: 2022 ஆம் ஆண்டில், ஐபிஎல் ஸ்ட்ரீமிங் உரிமையைப் பெறுவதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் வயாகாம்18 வாயிலாக ஏலத்தில் டிஸ்னி நிறுவனத்தை வென்றது. அன்று முதல் டிஸ்னி தனது இந்திய வர்த்தகத்தில் தொடர்ந்து வருவாய், வாடிக்கையாளர் இழப்பை எதிர்கொண்டு வருகிறது.

கூட்டணி நிறுவனம்: இந்த நிலையில் கடந்த மாதம், டிஸ்னி நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தை ரிலையன்ஸ் நிறுவனத்தின் வயாகாம்18 உடன் இணைத்து ஒரு கூட்டணி நிறுவனத்தை உருவாக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதன் மூலம், திரைப்படம், தொலைக்காட்சி தயாரிப்பு முதல் செய்திகள் மற்றும் விளையாட்டு வரை என மிகப்பெரிய மீடியா சாம்ராஜ்ஜியம் முகேஷ் அம்பானி கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது.

போட்டியாளர்களுக்குப் பாதிப்பு: வயாகாம்18 மற்றும் டிஸ்னி இணைப்பு, நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான்.காம் நிறுவனத்தின் பிரைம் வீடியோ+மினிடிவி போன்ற போட்டி நிறுவனங்களைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பர சந்தை: இந்த கூட்டணி நிறுவனம், இந்திய விளம்பர சந்தையில் பெரும்பகுதியைக் கைப்பற்றும். இதனால் ஒளிபரப்பு நிறுவனங்களையும் கடுமையாகப் பாதிக்கும் என்று, எலாரா செக்யூரிட்டீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் கரண் தவுரானி கடந்த வாரம் தெரிவித்தார்.

70,352 கோடி ரூபாய்: வயாகாம் 18 மற்றும் ஸ்டார் இந்தியா கூட்டணி சுமார் 8.5 பில்லியன் டாலர் அதாவது 70,352 கோடி ரூபாய் மதிப்புடன் இந்தியாவின் மிகப்பெரிய மீடியா நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இக்கூட்டணி நிறுவனத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 16.34% பங்குகளையும், வயாகாம்18 46.82% பங்குகளையும், டிஸ்னி 36.84% பங்குகளை வைத்திருக்கும்.

CCI தலையீடு: பொதுவாக, நிறுவன இணைப்புகளின் போது சந்தை பங்கு 40-50% ஐ விட அதிகமாக இருந்தால், CCI விரிவான விசாரணை நடத்தும். சந்தை மதிப்பீடுகளின்படி, தொலைக்காட்சி ஒளிபரப்பு பிரிவில், ஸ்டார்-வயாகாம்18 கூட்டணி, நெட்வொர்க் அளவில் 40% க்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கீட்டைக் கொண்டுள்ளது.

ஸ்ட்ரீமிங் சேவை ஆதிக்கம்: இதேபோல் விளையாட்டுப் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு உரிமைகள் பிரிவில் ஸ்டார்-வயாகாம்18 கூட்டணி, நேரடி விளையாட்டு பிரிவில் கிட்டத்தட்ட முழு கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.

முகேஷ் அம்பானி ஆதிக்கம்: வயாகாம்18 நிறுவனத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆதிக்கம் செலுத்தும் டிவி18 நிறுவனம் 73.91 சதவீத பங்குகளையும், போதி ட்ரீ சிஸ்டம்ஸ் 13.08 சதவீத பங்குகளையும், பரமவுண்ட் குளோபல் நிறுவனம் 13.01 சதவீத பங்குகளைக் கொண்டு உள்ளது. டிவி18 நிறுவனத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 60.4 சதவீத பங்குகளை வைத்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+