பரந்தூர், காஞ்சிபுரம்: சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைப்பதில் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக இருக்கிறது . நிலத்தை கையகப்படுத்துவதற்கான பணிகளை அரசு தொடங்கி இருக்கிறது. இதற்காக நில உரிமையாளர்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும் என்ற விவரங்கள் அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீடுகளை இழப்போருக்கு நிவாரணம்: நில உரிமையாளர்களுக்கு மட்டுமல்ல பரந்தூர் விமான நிலையம் அமைப்பதால் அந்த பகுதியில் தங்களுடைய வீடு மற்றும் உடமைகளை இழக்கும் மக்களுக்கும் அரசு தரப்பில் என்ன நிவாரணம் வழங்கப்படும் என்ற விவரங்கள் தற்போது வெளியாகிருக்கின்றன . விவசாய நிலங்கள் இல்லாமல் பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணிக்காக வீடுகள், கடைகள், காலநடை பண்ணைகள் உள்ளிட்டவையும் பரந்தூரில் கையகப்படுத்தப்பட உள்ளன.

வேறு இடத்தில் வீட்டு மனை: வீட்டின் கட்டமைப்பு மதிப்பில் 100 சதவீத இழப்பீடு தொகையாகவும் கூடுதலாக 25 சதவீதம் ஊக்கத்தொகையாகவும் வழங்கப்படும் என தெரிவித்துள்ள அரசு இதற்கு மாற்றாக வேறு இடத்தில் வீட்டு மனை வழங்கப்படும் என கூறியுள்ளது.அந்த வகையில் 5 செண்ட் வரையிலான இடத்தை வழங்கும் மக்களுக்கு வேறு இடத்தில் 5 செண்ட் நிலம் வழங்கப்பட உள்ளது. 5 முதல் 7 செண்ட் வரையிலான இடத்தை வழங்குவோருக்கு 7 செண்ட் நிலமும், 7 செண்டுக்கு மேல் இடங்களை வழங்குவோருக்கு 10 செண்ட் அளவிலும் அரசு சார்பாக நிலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில இந்து நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
குடும்பத்தில் ஒருவருக்கு வேலை: பரந்தூரில் இருந்து இடம் மாற்றம் செய்யப்படும் குடும்பங்களுக்காக அரசு வேறு இடத்தில் 400 சதுர அடி பரப்பளவில் வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவித்துள்ளது. இந்த வீடு வேண்டாம் எனக் கூறுபவர்கள் அதற்கு பதிலாக 8 லட்சம் ரூபாயை பணமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும் பரந்தூர் விமான நிலைய பணிக்காக தங்களுடைய வீடு மற்றும் உடமைகளை வழங்கக்கூடிய குடும்பங்களை சேர்ந்த தலா ஒருவருக்கு அரசு சார்பில் வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும் அல்லது 7.5 லட்சம் பணமாக கொடுக்கப்படும் அல்லது அடுத்த 20 ஆண்டு காலத்திற்கு மாதத்திற்கு 3 ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு மாதாந்திர உதவி தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைகளுக்கு ரூ.1லட்சம்: பரந்தூர் விமான நிலைய பணிக்காக வீடுகள், கடைகளை வழங்குவோருக்கும் மொத்தமாக தலா 70 ஆயிரம் ரூபாய் பணம் ஒரு முறை செட்டில்மெண்டாக வழங்கப்படும். தங்களுடைய கால்நடை பண்ணைகளை இழக்கும் நபர்களுக்கு ஒரு முறை நிதி உதவியாக 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு தெரிவித்து இருக்கிறது. பண்ணைகள் மற்றும் பெட்டிக்கடைகள் உள்ளிட்டவற்றை நடத்தி வந்தவர்கள் வேறு இடங்களில் அவற்றை இடமாற்றம் செய்வதற்கு அல்லது புதிதாக கட்டுவதற்கு என 1 லட்சம் ரூபாய் ஒருமுறை நிதி உதவியாக வழங்கப்படும்.
30% மானியத்துடன் கடன் உதவி: முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் இந்த பகுதியிலிருந்து இடமாற்றம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கக்கூடிய குடும்பங்களில் ஒருவருக்கு சுயதொழில் செய்வதற்கு ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும், இதில் 30 சதவீத தொகை மானியமாகவும் வட்டி தொகையில் 3 சதவீதம் மானியத்தையும் அரசு செலுத்தி விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலைய பணிக்காக வீடுகளை வழங்குவோரின் குடும்பங்களில் ஒரு நபர் தேர்வு செய்யப்பட்டு சரக்கு போக்குவரத்து ,வாகன உற்பத்தி, அழகு கலை, கட்டுமானம் ,ஐடி சேவை, சுற்றுலா உள்ளிட்ட தொழில்களுக்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அரசு வழங்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications