சென்னை: சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பது தொடர்பான திட்ட அனுமதிக்கான கொள்கை அளவிலான ஒப்புதலை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வழங்கி இருக்கிறது. இதனை அடுத்து புதிய விமான நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்த புள்ளிகளை கூடிய விரைவில் தமிழ்நாடு அரசு கோர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 5300 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கிறது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஒருபுறம் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பான திட்ட அனுமதிக்காக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பித்திருந்தது. இதனை பரிசீலித்த விமான போக்குவரத்து துறை அமைச்சகம் திட்ட அனுமதிக்கு கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கி இருக்கிறது. விமான நிலைய திட்டத்திற்கு இடத்திற்கான அனுமதி ஏற்க்கனவே கிடைத்த நிலையில் தற்போது திட்டத்திற்கான ஒப்புதலும் கிடைத்திருப்பதால் அரசு விரைவில் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்த புள்ளிகளை கோர இருக்கிறது.
பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணிகளுக்கு இரண்டு கட்டங்களாக ஒப்புதல் கிடைக்க வேண்டும். ஒன்று இடத்திற்கான ஒப்புதல் மற்றொன்று திட்டத்திற்கான கொள்கை ரீதியிலான ஒப்புதல். விமான நிலைய இடத்திற்கான ஒப்புதல் 2024 ஆகஸ்ட் மாதமே கிடைத்தது. தற்போது கொள்கை ரீதியிலான திட்ட ஒப்புதல் கிடைத்திருக்கிறது. பரந்தூர் விமான நிலையம் தற்போது பயன்பாட்டில் இருக்கும் மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் அமைய இருக்கிறது.
27,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த விமான நிலைய கட்டுமான பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. முதல் கட்ட திட்ட பணிக்காக 1145 கோடி தேவைப்படுவதாக தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகமான டிட்கோ தெரிவித்துள்ளது. 2026 ஜனவரி மாதத்தில் இருந்தே முதல் கட்ட கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்றும் இரண்டு ஆண்டுகளில் அந்த பணிகள் முடிவடையும் என்றும் சொல்லப்படுகிறது.
இரண்டு இணையான ஓடுபாதைகளுடன் இந்த விமான நிலைய கட்டுமான பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. முதல் கட்ட டெர்மினல் 3,51,380 சதுர மீட்டர்கள் பரப்பளவில் கட்டப்பட இருக்கிறது. ஒப்பந்த புள்ளி கோருவதற்கான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும் கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications