பரந்தூர், காஞ்சிபுரம்: சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இருக்கிறது. இதற்காகத்தான் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.
பரந்தூர் விமான நிலையம்: சென்னை சர்வதேச விமான நிலையம் 2035 ஆம் ஆண்டுக்குள் பயணிகள் வருகை என்பது 40 மில்லியன் என்ற அளவை கட்டும் என கணிக்கப்படுகிறது. இது விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறனை விட இரண்டு மடங்கு அதிகமாகும். எனவேதான் சென்னைக்கு இரண்டாவதாக ஒரு சர்வதேச விமான நிலையம் வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பரந்தூர் பகுதியை தேர்வு செய்தது. ஆனால் அங்கு இருக்கக்கூடிய விவசாயிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

நிலம் கையகப்படுத்தும் பணி: பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டு விரிவான திட்ட அறிக்கைகளை தயாரித்தது. பின்னர் இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் மத்திய அரசின் அனுமதியை பெற்றது. தற்போது விமான நிலையத்துக்கான நிலத்தை கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஈடி நவ் வெளியிட்டுள்ள பிரத்தியேக செய்தியில் இந்த ஆண்டு இறுதிக்குள் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து விடும் என அதிகாரிகள் தெரிவித்ததாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு கட்டுமான பணி தொடக்கம்: பரந்தூர் விமான நிலையம் அமைக்க அரசு வசம் 1972 ஏக்கர் நிலம் இருக்கிறது, 3 ,774 ஏக்கர் நிலத்தை தனியார் நில உரிமையாளர்களிடமிருந்து அரசு கையகப்படுத்த வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்துவிட்டால் அடுத்த ஆண்டே கட்டுமான பணி தொடங்கி விடும். 2028ஆம் ஆண்டுக்குள்ளேயே முதல் கட்ட கட்டுமான பணியை முடித்து விமான நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
முதல் கட்ட பணி: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக கட்டுமான பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் கட்ட கட்டுமான பணி நிறைவடைந்தாலே 20 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக பரந்தூர் விமான நிலையம் இருக்கும்.

எவ்வளவு இழப்பீடு: கடந்த மாதம் தான் தமிழ்நாடு அரசு நிலம் கையகபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும் எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும் என்ற தகவலையும் வெளியிட்டது. இதன்படி பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 35 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சம் 2.5 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நிலம் கையகப்படுத்த அதிகாரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நில உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலங்களுக்கான இழப்பீடு நிர்ணயம் செய்வது நிலம் கையகப்படுத்தி இழப்பீட்டு தொகை அவர்களை சென்றடைவது ஆகியவற்றை உறுதிப்படுத்தும் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு ஜூலை 7ஆம் தேதி நிலவரப்படி 17.52 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி இருக்கிறது, நில உரிமையாளர்களுக்கு 9.2 கோடி ரூபாயி இழப்பீடாக வழங்கியிருக்கிறதாம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications