பரந்தூர், காஞ்சிபுரம்: பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது. சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது.
பரந்தூர் விமான நிலையம்: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கலாம் என தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்று இருக்கிறது. தற்போது பரந்தூர் விமான நிலையத்தை கட்டுவதற்கான டெண்டர் விடும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் பரந்தூர் விமான நிலையத்திற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

அதிகபட்சம் ரூ.2.57 கோடி இழப்பீடு: பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அரசு எவ்வளவு விலை நிர்ணயம் செய்துள்ளது என்ற விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி ஒரு ஏக்கருக்கு 35 லட்சம் ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 2. 57 கோடி ரூபாய் வரை வழங்கப்பட இருப்பது தெரிய வருகிறது. தமிழ்நாடு அரசு பரந்தூர் விமான நிலையத்திற்காக 3331.25 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது.
மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் :பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் இருக்கும் நிலங்களுக்கான அரசு வழிகாட்டுதல் மதிப்பை விட அதிகமாக அரசு இழப்பீடு வழங்குவதற்கு முன் வந்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலாளர் அருண் ராய் வெளியிட்டுள்ள அசராணையில் ஒரு ஏக்கருக்கு 35 லட்சம் ரூபாயில் இருந்து 60 லட்சம் ரூபாய் வரை இழப்பீடாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மரங்களுக்கு இழப்பீடு: நிலத்தில் இருக்கும் மரங்கள் உள்ளிட்டவற்றுக்கு இழப்பீடு பெறலாம் அது தவிர அரசின் வழிகாட்டுதல் மதிப்பை விட 275 சதவீதம் கூடுதல் இழப்பீடு, 25 சதவீத ஊக்கத்தொகை ஆகியவற்றை அரசு வழங்க தயாராக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு 5 லட்சத்தில் இருந்து 17 லட்சம் வரையில் இருக்கிறது ஆனால் அதைவிட பல மடங்கு அதிகமாக இழப்பீடு தரப்படுவதாக அரசு தரப்பு குறிப்பிடுகிறது. எனவே ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 35 லட்சத்தில் இருந்து அதிகபட்சம் 2. 57 கோடி ரூபாய் வரை இழப்பீடாக கிடைக்கும்.
மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம்: பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலத்தை வழங்குபவர்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் நிலத்தின் அளவை பொறுத்து இந்த தொகையானது மாறுபடும். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு தொகையை நிர்ணயம் செய்யும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் கட்டமாக 5 முதல் 17 லட்சம் ரூபாய்க்குள் வழிகாட்டி மதிப்பீடு கொண்ட 374. 53 ஏக்கர் பரப்பளவு நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு வழங்கும் பணி நடைபெறும். அடுத்ததாக ஒரு ஏக்கருக்கான வழிகாட்டி மதிப்பீடு 17 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடிய 996 ஏக்கர் பரப்பளவிற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications