சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது. சென்னையில் தற்போது மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.
வரும் 2030ஆம் ஆண்டுக்குள் மீனம்பாக்கம் விமான நிலையத்தின் பயணிகள் வருகையும் சரக்கு வருகையும் அதிகரிக்கும் என்பதால் அதற்குள்ளாக சென்னைக்கு இரண்டாவதாக ஒரு விமான நிலையம் அமைய வேண்டும் என அரசு முடிவு செய்தது. இதற்காக பல்வேறு இடங்களை ஆய்வு செய்து காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது பொருத்தமானதாக இருக்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இந்த பகுதியில் விரிவான திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டன, இது மத்திய அரசுக்கும் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது . தற்போது விமான நிலையத்தை கட்டுவதற்கான பணிகளை அரசு தொடங்கியிருக்கிறது. முதல் கட்டமாக இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்ற வருகின்றன . விமான நிலையம் கட்டுவதற்கு சில கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இருந்தாலும் தமிழ்நாடு அரசு தீவிரமாக அந்த பணிகளை முன்னெடுத்து இருக்கிறது.
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இரண்டு தாலுகாக்களிலும் 5,320 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையத்தை அமைப்பதற்கான நிலம் என்பது தேவைப்படுகிறது. இதில் 3774 ஏக்கர் நிலம் விவசாயிகளிடமிருந்தும் தனியாரிடமிருந்தும் கைப்பற்ற வேண்டும் . இதற்கான பணிகள் தான் தற்போது நடைபெற்று வருகின்றன . பரந்தூர் , வளத்தூர், மடப்புரம் என 20 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
இதில் 13 கிராமங்களில் விமான நிலையமும் பிற கிராமங்களில் விமான நிலையத்திற்கு தேவையான சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட இருக்கின்றன. தற்போது வருவாய்த்துறையினர் 21 அலகுகளாக பிரித்து நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். 3694 பேருக்கு முதல் கட்டமாக நோட்டீஸ் வழங்கி இருக்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களில் 12 கிராமங்களை சேர்ந்த 444 பேர் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக தங்களுடைய நிலங்களை வழங்கி இருக்கிறார்கள்.
இதுவரை 540 ஏக்கர் பரப்பளவிலான நிலம் கையகப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாடு அரசினை பொறுத்தவரை இந்த நில உரிமையாளர்களுக்கு சந்தை மதிப்பை விட மூன்றரை மடங்கு அதிகமான தொகையை இழப்பீடாக வழங்கி வருகிறது. அதிகபட்சமாக பரந்தூர் பகுதியில் இருந்து பெரும்பாலான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக செய்தி தெரிவிக்கிறது.
ஏகனாபுரத்தில் நிலம் எடுப்பு சவால் மிகுந்ததாக இருக்கும் ஏனெனில் அந்த கிராம மக்கள் தான் மிகக் கடுமையாக இந்த விமான நிலைய திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். இந்த நிலம் கையகப்படுத்தும் பணி தாமதமாவதால் விமான நிலையம் கட்டுமானமும் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வருவதும் தொடர்ந்து தாமதமான வண்ணம் இருக்கிறது. ஏற்கனவே இந்த திட்டம் ஓராண்டு காலம் தாமதம் அடைந்து விட்டது.
நிலம் கையகப்படுத்தும் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து விட அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. நிலம் கையகப்படுத்தப்பட்ட உடன் அரசு கட்டுமான பணிக்கான டெண்டரை வெளியிடும். இதன் பின் கட்டுமான பணி தொடங்கும். அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்குள்ளாகவே பணிகளை தொடங்க அரசு தீவிரம் காட்டுவதாக தெரிகிறது. அப்படி தொடங்கினால் 2028ஆம் ஆண்டு இறுதியில் முதல் கட்ட பணிகள் நிறைவு பெறும் வாய்ப்புள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications