பரந்தூர், காஞ்சிபுரம்: சென்னையில் தற்போது ஒரு சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கே பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால் சென்னைக்கு இரண்டாவதாக ஒரு விமான நிலையம் தேவை என்பதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இருக்கிறது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டது .
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக பல்வேறு ஆய்வு பணிகள் நடத்தப்பட்டு மத்திய அரசின் அனுமதியும் பெறப்பட்டிருக்கிறது. தற்போது பரந்தூரில் விமான நிலையத்தை கட்டுவதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்ற வருகிறது. இதில் தான் பல்வேறு சவால்கள் எழுந்துள்ளன. இது பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணிகளை ஓராண்டு வரை தாமதமாக்க கூடும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு அந்த பகுதியை சேர்ந்த ஏகனாபுரம் உள்ளிட்ட பகுதி விவசாயிகளும் கிராம மக்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் . அண்மையில் தான் தமிழ்நாடு அரசு நிலங்களுக்கான இழப்பீடு தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டது . நிலங்களை கையகப்படுத்தும் அதிகாரியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
தற்போதைக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்தாலும் ஏகனாபுரம் பகுதியை சேர்ந்த மக்கள் இதில் பங்கேற்காமல் இருப்பதால் நிலம் கையகப்படுத்துவதில் சவால் ஏற்பட்டிருப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி குறிப்பிடுகிறது. இதன் காரணமாக விமான நிலைய கட்டுமான பணிக்கான ஒப்பந்தம் விடுவதும் தாமதமாகும் .
தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தும் பணிகளை தொடங்கியிருந்தாலும் முதல் கட்ட கட்டுமான பணிக்கு தேவையான பெருமளவிலான நிலம் இன்னும் அரசின் கைவசம் வந்து சேரவில்லை என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. முதலில் தமிழ்நாடு அரசு 2025 அக்டோபர் மாதத்திற்குள் நிலம் கையகப்படுத்தும் பணிகளை முடித்துவிட்டு 2026 ஜனவரி மாதத்தில் இருந்து கட்டுமான பணிகளை தொடங்குவது என திட்டமிட்டு இருந்தது . முதல் கட்டமாக 2028 டிசம்பர் மாதத்திலேயே கட்டுமான பணி முடிந்து விமான போக்குவரத்தை தொடங்குவது என முடிவு செய்திருந்தது.
ஆனால் நிலம் கையகப்படுத்தும் பணி தாமதமாகி வருவதால் அடுத்த கட்டமாக டெண்டர் விடுவது கட்டுமான பணி தொடங்குவது உள்ளிட்டவை அனைத்தும் ஓராண்டு வரை தாமதமாகும் என சொல்லப்படுகிறது. எனவே பரந்தூர் விமான நிலையம் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வருவது வருவதற்கு 2029 ஆம் ஆண்டு டிசம்பர் அல்லது 2030ம் ஆண்டு ஜனவரி ஆகிவிடும் என கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசு 27,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு கட்டங்களாக பரந்தூரில் சர்வதேச விமான நிலையத்தை கட்டுவதற்கு திட்டமிட்டு இருக்கிறது இதற்கு 5,369 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications