சென்னை: தமிழ்நாடு அரசின் கனவு திட்டமாக மாறியிருக்கும் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு தேவையான ஒப்புதல்கள் கிடைத்திருக்கும் வேளையில், இந்த மாபெரும் விமான நிலையத்திற்கான நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது ஏகனாபுரம் கிராமத்தில் மொத்தம் 445 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நில உரிமையாளர்கள் அடுத்த ஒரு மாதத்திற்குள் தங்கள் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கலாம் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு இப்பகுதியில் இருக்கும் மக்கள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் வேளையில், 445 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் திட்டம் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு தற்போது இருக்கும் சென்னை விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்வதற்குப் பல பிரச்சனைகள் இருக்கும் காரணத்தால், வெளிநாடுகளிலும், பெரும் நகரங்களில் இருப்பது போன்ற சகல வசதிகள் கொண்ட விமான நிலையத்தை அமைக்கும் திட்டத்துடன் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் முன் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2022 ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதாக அறிவித்தது.
இந்த மாபெரும் திட்டத்திற்காக 20 கிராமங்களில் இருந்து சுமார் 5,746 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.இந்த திட்டத்தை 2028 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய மத்திய - மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு சில மாதங்களுக்கு முன்பு சென்னை சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்த 193 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகளைப் பல கட்ட முயற்சிகளுக்குப் பின்பு கைவிட்டது. இந்த நில கையகப்படுத்தும் திட்டம் கைவிடப்பட்டதற்கான காரணம், நிலம் கையகப்படுத்தப்பட வேண்டிய பகுதியில் பல கட்டிடங்கள் இருப்பதால், நிலம் கையகப்படுத்துவதற்கான செலவு அதிகமாக இருக்கும். காரணத்தாலும், இந்த திட்டம் லாபகரமாக இருக்காது என கணக்கிடப்பட்டு இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து தமிழ்நாடு அரசின் கவனம் முழு கவனமும் பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் திருப்பியுள்ளது. சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படவுள்ள இந்த விமான நிலையத்திற்கான டெண்டர்கள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் விடப்படும் என TIDCO அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. சென்னை நகரம், தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் பிற துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து வருகிறது. இந்த வளர்ச்சிக்கு ஏற்ப, சென்னைக்கு ஒரு பெரிய விமான நிலையம் அவசியமாகிவிட்டது.
ஏனெனில், பெரிய விமானங்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட நவீன விமான நிலையம் இல்லாததால், பல சர்வதேச விமான சேவைகள் சென்னையைத் தவிர்த்து, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களைத் தேர்வு செய்கின்றன.
இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு அரசு சென்னைக்கு அருகில் பரந்துரில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை முதன்முதலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி 2007-ம் ஆண்டு அறிவித்தார். பின்னர், பல ஆய்வுகளுக்குப் பிறகு, பரந்தூர் இடம் இதற்கு மிகவும் ஏற்றது என முடிவு செய்யப்பட்டது.
புதிய பரந்தூர் விமான நிலையம், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கும். இது, வெளிநாட்டு முதலீடுகளை மேலும் ஈர்க்கவும், மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் உதவும். மேலும், இது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் மக்களுக்கு நல்ல போக்குவரத்து வசதியை வழங்கும்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications