சென்னை: தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சிக் கழகம் (TIDCO), சென்னையின் புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்க ஏகனாபுரம் கிராமத்தில் சுமார் 153 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்த நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை, பரந்தூர் புதிய விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விமான நிலையம், சென்னையின் தற்போதைய விமான நிலையமான சென்னை சர்வதேச விமான நிலையத்துடன் இணைந்து செயல்படும். இந்த புதிய விமான நிலையம், சுமார் 45,000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். 2029 ஆம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விமான நிலையம், வருடத்திற்கு 10 கோடிக்கும் அதிகமான விமான பயணிகளுக்குச் சேவை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும். இது, சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய விமான நிலையம், சர்வதேச தரத்திற்கு ஏற்ப அமைக்கப்படும். இது, சென்னை மற்றும் தமிழ்நாட்டிற்கு ஒரு முக்கியமான போக்குவரத்து மையமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம் அமைக்கப்படுவதுள்ளதாக 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட போது, இப்பகுதியில் விமான நிலையம் அமைப்பதில் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த பிரச்சனைகளைத் தாண்டி, விமான பயணிகளுக்குப் போக்குவரத்து சிக்கல் ஏற்படும் என்றும் பலரும் கூறினர். ஆனால் இதேவேளையில் சென்னைக்கு 2வது விமான நிலையமும் அவசியமானதாக உள்ளது. அது ஏன் தெரியுமா..?
தமிழ்நாடு, குறிப்பாக சென்னை நகரம் தொழில்நுட்பம், உற்பத்தி, நிதி தொழில் என பல்வேறு துறைகளில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சியுடன், சென்னை விமான நிலையம் தற்போதுள்ள பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சரக்கு போக்குவரத்தைத் திறம்படக் கையாள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், சென்னையின் அருகில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி, 2007-ஆம் ஆண்டில் சென்னைக்கு அருகில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை முதன்முதலாக அறிவித்தார். பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர், பரந்தூர் இடம் இதற்கு மிகவும் பொருத்தமான இடமாகத் தேர்வு செய்யப்பட்டது.
தற்போதைய சென்னை விமான நிலையத்தின் சவால்கள்:
பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: சென்னை விமான நிலையம் தற்போது மாதம் 10 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளைக் கையாள்கிறது.
பெரிய விமானங்களைக் கையாளும் திறன் இல்லை: பெரிய விமானங்களை நிறுத்தும் வசதிகள் இல்லாததால், பல சர்வதேச விமானச் சேவைகள் சென்னையைத் தவிர்த்துப் பிற நகரங்களைத் தேர்வு செய்கின்றன.
உள்நாட்டு விமானச் சேவையின் ஆதிக்கம்: சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானச் சேவையே அதிகம். சர்வதேச விமானச் சேவைகளை விரிவுபடுத்தும் தேவை உள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications