இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, அவருடைய மனைவி, இரு மகன்கள், மூத்த மருமகள் வரையில் அனைவரும் அதானி குழும நிர்வாகத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு இருந்தாலும் அதிகளவில் வெளியுலகிற்கு வருவதில்லை.
இதற்கு கௌதம் அதானி குடும்பத்தில் நடந்த சில சம்பவங்கள் முக்கிய காரணமாக இருக்கிறது. கௌதம் அதானியின் இளைய மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில், மூத்த மகனின் மனைவியும், அதானி குடும்பத்தின் மூத்த மருமகள் யார்..?

கௌதம் அதானியின் மூத்த மகன் கரண் அதானி தற்போது அதானி குழுமத்தின் உயர் மட்ட நிர்வாக குழுவில் இருப்பது மட்டும் அல்லாமல் அதானி போர்ட்ஸ் அண்ட் SEZ நிறுவனத்தின் சிஇஓ-வாகவும் உள்ளார். இவர் 2013 ஆம் ஆண்டு பரிதி ஷ்ராஃப் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
கரண் அதானி மற்றும் பரிதி ஷ்ராஃப் ஆகியோரின் திருமணம் ஆகாஷ் அம்பானி திருமணம் போல் உலகமே வியக்கும் வண்ணம் நடக்கவில்லை என்றாலும் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, ஆனந்த மஹிந்திரா உட்பட பல தொழிலதிபர்களும், அரசியல் தலைவர்களுக்கும் இவர்களுடைய திருமணத்திற்கு வந்தனர்.
திருமணத்திற்கு பின்பு பரிதி ஷ்ராஃப் தனது பெயரை பரிதி அதானி என மாற்றிக்கொண்டார். கரண் அதானி மற்றும் பரிதி ஷ்ராஃப் 2016 இல் ஒரு பெண் குழந்தை பிறந்தது, இக்குழந்தையின் பெயர் அனுராதா. கரண் அதானி தனது குடும்பத்துடன் தற்போது அகமதாபாத்தில் இருக்கும் பிரம்மாண்டமான வீட்டில் வசித்து வருகின்றனர். யார் இந்த பரிதி அதானி..?
இந்தியாவின் முன்னணி மற்றும் அதிக பணம் வசூலிக்கும் சட்ட ஆலோசக நிறுவனம் Cyril Amarchand Mangaldas நிறுவனத்தின் நிறுவனர்களான சிரில் ஷ்ராஃப் மற்றும் வந்தனா ஷ்ராஃப் ஆகியோரின் மகள் தான் பரிதி அதானி. Cyril Amarchand Mangaldas நிறுவனம் உலகம் முழுக்க வர்த்தகத்தை வைத்துள்ளது கார்பரேட் நிறுவனம் முதல் வென்சர் கேப்பிடல் வரையில் பல வாடிக்கையாளர்களை வைத்துள்ளனர்.
பரிதி அதானி மும்பை பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மற்றும் நிதித்துறையில் இளங்கலை பட்டம், மும்பையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப் படிப்பு, இதை தொடர்ந்து 2013 INSEAD என்ற பிரெஞ்சு பிஸ்னஸ் ஸ்கூலில் பட்டம் பெற்றுள்ளார்.
அதானி குடும்பத்தின் மூத்த மருமகளாக இருந்தாலும் இன்றும் தனது தந்தையின் Cyril Amarchand Mangaldas நிறுவனத்தின் குஜராத் அலுவலகத்திற்கு பரிதி அதானி தான் தலைவராக பணியாற்றி வருகிறார்.

கௌதம் அதானி-யின் இளைய மகன் ஜீத் அதானி-க்கும் வைர வியாபாரியின் மகளான திவா ஜெய்மின் ஷா-வுக்கும் மார்ச் 12 அன்று நிச்சயதார்த்தம் நடந்த விரைவில் திருமணம் நடக்க உள்ளது. சி.தினேஷ் & கோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளரும், பிரபல வைர வியாபாரியுமான ஜெய்மின் ஷாவின் மகள் தான் திவா ஜெய்மின் ஷா.
ஜீத் அதானி 2019 இல் அதானி குழும பணியில் சேர்ந்து, தற்போது அதானி குழுமத்தின் நிதி பிரிவின் துணைத் தலைவராக உள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications