குடும்பத் தொழிலைப் பின்னணியாக வைத்திருப்பவர்கள் எல்லாம் கடின உழைப்புக்கும், அயராத அர்ப்பணிப்புக்கும் சம்பந்தம் இல்லாதவர்கள் என்று பலரும் கருதுவதுண்டு. ஆனால் இந்தக் கருத்து தவறானது என்று ஒரு பெண் தனது தொழில் வெற்றியின் மூலம் நிரூபித்துள்ளார்.
நதியா சௌகான் தனது தந்தை பிரகாஷ் சௌகானின் கம்பெனியான பார்லே அக்ரோவில் 2003 ஆம் ஆண்டு சேர்ந்தார். அப்போது கம்பெனியின் வருவாய் வெறும் ரூ.300 கோடி ஆக இருந்தது. இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டில் நிறுவனம் நல்ல வளர்ச்சியைப் பெற்று ஆண்டுக்கு ரூ.4200 கோடி சம்பாதித்தது.

2022-2023 இல் ரூ.8000 கோடியாக உயர்ந்தது. இதற்கு மூலகாரணம் நதியா சௌகானின் பிரமாதமான உழைப்பு. 37 வயதான நதியா பார்லே அக்ரோ நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரியாக இருக்கிறார். அத்துடன் இணை மார்க்கெட்டிங் இயக்குநராகவும் உள்ளார். நதியாவின் மூத்த சகோதரி சஹானா சௌகான் கம்பெனியின் சிஇஓவாக உள்ளார்.
போர்ப்ஸ் தகவல்படி நதியா சிறுவயது முதலே அவரது தந்தையால் பயிற்சி அளிக்கப்பட்டார் என்றும் மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நதியாவுக்கு சொல்லித் தருவார் எனத் தெரிகிறது.
1985 இல் நிறுவப்பட்ட பார்லே அக்ரோ நிறுவனம், நதியா பிறந்த அதே ஆண்டில் தொடங்கப்பட்டது. பின்னர் பிரகாஷ் ஒரு ஸ்வீடிஷ் நிறுவனத்தின் தயாரிப்பான டெட்ராபேக்கில் மாம்பழ பானத்தை அறிமுகப்படுத்தினார்.
எச்.ஆர் காலேஜ் ஆஃப் காமர்ஸ் அண்ட் எகனாமிக்ஸில் பட்டம் பெற்ற பிறகு 17 வயதில் நிறுவனத்தில் நதியா சேர்ந்தபோது தங்கள் நிறுவனத்தின் 95 சதவீத வருமானம் ஒரே பொருளில் இருந்து வந்ததைக் கவனித்தார். அது ஃப்ரூட்டி. அதன்பிறகு, மற்ற பொருட்களில் நதியா கவனம் செலுத்தத் தொடங்கினார்.
2005 ஆம் ஆண்டில், அவர் ஆப்பி ஃபிஸ்ஸை அறிமுகப்படுத்தினார். அது மார்க்கெட்டில் பிரபலம் ஆனது. இந்தியாவின் முதல் பேக்கேஜ் செய்யப்பட்ட நிம்பூ பானி உள்ளிட்ட பிற தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினார் நதியா. அவரும் அவருடைய சகோதரியும் பல புதிய உற்பத்தி ஆலைகளை நிறுவினர்.
2015 ஆம் ஆண்டில், நதியா நிறுவனத்துக்கு அதிசயங்களைச் செய்த ஃப்ரூட்டியை மீண்டும் தொடங்கினார். பிசினஸ் டுடே படி, வணிகத்தில் ஃப்ரூட்டியின் பங்களிப்பு 48 சதவீதமாக இருந்தது. நிறுவனத்தின் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர், பெய்லி ரூ.1000 கோடி வணிகமாக மாறியது.
அவர் இப்போது 2030-க்குள் நிறுவனத்தை ரூ.20000 கோடி பிராண்டாக மாற்ற இலக்கு வைத்துள்ளார். பார்லே குழுமம் நதியா சௌகானின் தாத்தா மோகன்லால் சௌஹானால் 1929 இல் நிறுவப்பட்டது. மோகன்லாலின் இளைய மகன் ஜெயந்திலால், 1959 ஆம் ஆண்டு பானங்கள் வணிகத்தைத் தொடங்கினார்.
தம்ஸ் அப், லிம்கா, கோல்ட் ஸ்பாட், சித்ரா மற்றும் மாஸா போன்ற பிராண்டுகளை வைத்திருந்த நிறுவனம், ரமேஷ் சௌஹான் மற்றும் பிரகாஷ் சௌஹானுக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு, குழு இந்த பிராண்டுகளை 1990களில் கோகோ கோலாவுக்கு விற்றது. இரண்டு சகோதரர்களும் பின்னர் தங்களுக்குள் வணிகங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications