முன்னணி FMCG நிறுவனமான பார்லே ப்ராடக்ட்ஸ், 2025-ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் தனது தயாரிப்புகள் அனைத்திற்கும் 5% விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு பார்லே நிறுவனத்தின் பிஸ்கட், பிரெட், கேக் மற்றும் இதர ஸ்நாக்ஸ் பொருட்களுக்கு பொருந்தும் என்றும் கூறப்படுகிறது. பல்வேறு தலைமுறைகளின் விருப்பத் தேர்வாக பார்லே-ஜி பிஸ்கட்கள் இருந்து வருகிறது. பள்ளிக்கூடத்திற்கு செல்லும்போது, பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும்போது மற்றும் டீயுடன் சேர்த்து சாப்பிடுவது என பார்லே-ஜி பிஸ்கட் உடனான நினைவுகள் இன்னும் பலரின் மனதில் நிறைந்திருக்கிறது.
இந்த விலை உயர்வுடன் சேர்ந்த பார்லே ஜி நிறுவனம் தனது ப்ராடக்டுகளின் எடையையும் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. அதாவது பார்லே-ஜி பிஸ்கட்டின் 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் பாக்கெட்டுகளின் எடை 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ளன. கோதுமை மாவு, சர்க்கரை, கோகோ பவுடர் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கூடுதலாக பாமாயில் மீதான இறக்குமதி வரியும் பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. பாமாயில் விலை கிட்டத்தட்ட 45 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் செலவு சுமையை தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
FMCG துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் பிரிட்டானியாவும் இதே போன்ற அறிவிப்பை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து தற்போது பார்லே-ஜி நிறுவனமும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த காலாண்டில் பிரிட்டானியா, தனது தயாரிப்புகளுக்கு விலை உயர்வை அறிவித்தது. இந்த நடவடிக்கைகள் அதிகரித்து வரும் மூலப்பொருட்களின் செலவுகளை ஈடுசெய்யும் பொருட்டு நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன.
பொதுவாக நுகர்வோர் பொருட்களின் விலை அதிகரிப்பது ஏழை, எளிய குடும்பங்களை பாதிக்கும். ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL), கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் (GCPL), மேரிகோ, ஐடிசி மற்றும் டாடா கன்சியூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் (TCPL) போன்ற முன்னணி FMCG நிறுவனங்கள் தினசரி பயன்படுத்தப்படும் பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
டீ, பிஸ்கட், டூத் பேஸ்ட், சோப், சோப் பவுடர் போன்ற எண்ணற்ற பொருட்களை இந்த FMCG நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன. எனவே இது போன்ற நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்தால் அது சாமானிய மக்கள் நிலையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
FMCG துறை முழுவதுமே மூலப்பொருட்களின் விலை உயர்வால் தங்கள் பொருட்களின் விலை உயர்வை அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக நுகர்வோர் இனிவரும் மாதங்களில் அன்றாடத் தேவைகளுக்கு நுகர்வோர் அதிக செலவு செய்ய நேரிடலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications