டெல்லி: உயர் ரத்த அழுத்தம் ,உடல் பருமன் , நீரிழிவு என பல்வேறு பிரச்சனைகளை இந்தியா சந்தித்துக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் தங்கள் உணவுகளில் எண்ணெயை குறைத்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியே கோரிக்கை விடும் அளவிற்கு நாட்டில் தற்போது உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
உடல் பருமன்: குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இந்த உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் அதிகரித்து வரக்கூடிய சூழலில் மக்கள் தங்களின் உணவு பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் நாட்டு மக்களுக்கு முன் உதாரணமாக நாடாளுமன்றத்தில் எம்பிக்களுக்கு வழங்கப்படும் உணவில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

எம்பிக்களுக்கு இனி சத்தான உணவு: மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா நாடாளுமன்றத்தில் எம்பிக்களுக்கு வழங்கப்படும் உணவுகள் ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த வகையில் தற்போது நாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு வழங்கப்படும் உணவு பட்டியலில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஹெல்த் ஸ்பெஷல் மெனு என ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஊட்டச்சத்துக்கு முக்கியத்துவம்: ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவக்கூடிய உணவுகள் இந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கின்றன. சிறு தானியங்களில் செய்யப்படும் உணவுகள், அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகள், புரோட்டின் நிறைந்த சூப் வகைகள் உள்ளிட்டவை நாடாளுமன்றத்தில் எம்பிக்களுக்கான உணவு பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு உணவும் கார்போஹைட்ரேட், சோடியம் மற்றும் கலோரிகள் குறைவாக இருக்கும் வகையில் மிக கவனமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அதிக நார்ச்சத்து: அதே வேளையில் இந்த உணவுகள் அனைத்துமே அதிக ஊட்டச்சத்துக் கொண்டவையாக இருக்கும் என நாடாளுமன்ற கேண்டீனில் வேலை செய்பவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஹெல்த் மெனுவில் ஒவ்வொரு உணவிலும் எவ்வளவு கலோரி இருக்கிறது என்ற விவரங்களும் இடம்பெற்று இருக்கிறதாம்.
தானிய பாயாசம்: நாடாளுமன்ற எம்பிக்கள் இனி கேண்டீனில் ராகி இட்லி, ஜோவர் உப்புமா , சர்க்கரை இல்லாத தானிய பாயாசம் , சன்னா சாட் , பாசிப்பருப்பு தோசை உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன. எம்பிக்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு நாட்டு மக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் வைத்தும் இந்த ஆரோக்கியம் மிகுந்த உணவு பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளன.
உடல் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை: இது தவிர எம்பிக்களுக்கு பார்லி அல்லது ஜோவர் சாலட், கார்டன் பிரஸ் சாலட், தக்காளி ரோஸ்ட், காய்கறி சூப் உள்ளிட்டவையும் இடம் பெற்று இருக்கின்றன . கிரில்லுடு சிக்கன், கிரில்லுடு ஃபிஷ் என மீன் மற்றும் சிக்கன் வகைகளும் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. கிரீன் டீ மற்றும் ஹெர்பல் டீ, சர்க்கரை சேர்க்கப்பட்ட சோடாக்களுக்கு பதிலாக மாம்பழம் உள்ளிட்ட பழ வகைகளில் செய்யப்பட்ட பானகம் ஆகியவையும் ஆரோக்கிய உணவு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications