இந்தியாவில் ரயில்களில் பயணம் செய்வதற்கு நாம் முன்கூட்டியே டிக்கெட்டுகளை பதிவு செய்தாக வேண்டும். பொது டிக்கட் முன்பதிவு ரயில் பயணம் தொடங்குவதற்கு 60 நாட்களுக்கு முன்பு தொடங்கும், தட்கல் டிக்கெட் முன்பதிவு ரயில் பயணம் தொடங்குவதற்கு முந்தைய நாள் தொடங்குகிறது.
பெரும்பாலும் டிக்கெட் பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்பனை ஆகிவிடும். ஏனெனில் ரயில்கள் குறைந்த கட்டணத்தில் எளிமையான சௌகரியமான பயணத்தை தருகின்றன என்பதால் ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போதுமே போட்டி நிறைந்ததாக இருக்கும். பொதுவாக நாம் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஆர்ஏசி என்ற வசதி இருக்கும். இதனை reservation against cancellation என அழைக்கிறார்கள்.

அதாவது ஆர்ஏசி டிக்கெட் என்பது இரண்டு பேருக்கு ஒதுக்கப்படும். இரண்டு பயணிகளுக்கும் பகுதி அளவு இருக்கையை இந்த டிக்கெட் உறுதி செய்யும். ஏற்கனவே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர் அதனை கேன்சல் செய்யும் போது காத்திருப்பில் உள்ள இருவருக்கு அந்த ஒரு இடம் ஆர்ஏசி டிக்கெட்டாக வழங்கப்படும். இரண்டு பயணிகள் ஒரே பெர்த்தில் பயணம் செய்வார்கள்.
ஒரே பெர்த்தில் இருவர் பயணம் செய்தாலும் இருவருமே முழுமையான தொகை தான் செலுத்துகிறார்கள். அதாவது ஒரு இருக்கைக்கு இரண்டு கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் தான் நாடாளுமன்ற பொது கணக்கு குழு ஒரே பெர்த்தில் இருவர் பயணிக்கும் போது ஏன் இரு பயணிகளும் முழு தொகையையும் செலுத்த வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது. இந்த சமயங்களில் ஆர்ஏசி டிக்கெட்டுகளுக்கு பாதி அளவு கட்டணம் வசூலிப்பது தான் நியாயம் என்றும் ரயில்வே துறைக்கு பொது கணக்கு குழு அறிவுறுத்தி இருக்கிறது.
ஆர்ஏசி டிக்கெட் இரண்டு பயணிகளுக்கு ஒதுக்கப்படுவதால் பகல் நேரத்தில் இருவரும் அமர்ந்து கொண்டு பயணிக்கலாம் இரவு நேரத்தில் இருவருமே தங்கள் கால்களை எதிரெதிரை நீட்டிக்கொண்டு உறங்கலாம். இருவரும் மியூச்சுவலாக இருக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே விதி.
ஆனால் ஒரு இருக்கையை இருவர் பகிரும் போது இரண்டு டிக்கெட் கட்டணம் வசூல் செய்வது நியாயமா என நாடாளுமன்ற பொது கணக்கு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. படுக்கை வசதிக்காக ஒரு பயணி கட்டணம் செலுத்த நிலையில் அவருக்கு அமர்வதற்கான ஆர்ஏசி இருக்கை மட்டுமே கிடைப்பதால் முழு கட்டணம் வசூலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத என தெரிவித்திருக்கிறது.
ஆர்ஏசி டிக்கெட் பயணிகளுக்கு பாதி கட்டணத்தை மட்டுமே வசூல் செய்து மீதியை ரயில்வே துறை திருப்பித் தர வேண்டும் அதற்கான வழிமுறைகளை விரைவில் உருவாக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் நமக்கான ஆர்ஏசி டிக்கெட் கட்டணம் பாதியாக குறையும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications