டெல்லி: பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. வழக்கமாக இந்திய நாடாளுமன்றம் ஒரு ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும். ஜனவரியிலிருந்து பிப்ரவரி மாதத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரும், ஜூலை முதல் ஆகஸ்ட் மாதத்தில் மழைக்கால கூட்டத் தொடரும் , டிசம்பரில் குளிர்கால கூட்டத்தொடரும் நடத்தப்படும்.
இந்த ஆண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் 19ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடைபெற்ற வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் , டெல்லி கார் குண்டு வெடிப்பு என பல்வேறு பரபரப்பான சூழல்களுக்கு மத்தியில் நாடாளுமன்றம் கூறுகிறது. முன்னதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தை சமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆளுங்கட்சி தரப்பில் அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு , ஜேபி நட்டா ஆகியோரும், எதிர்கட்சிகளான காங்கிரஸ் சார்பில் பிரமோத் திவாரி, ஜெயராம் ரமேஷ், திமுக சார்பில் டி ஆர் பாலு, திருச்சி சிவா, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட 36 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர் .
அப்போது குளிர்கால கூட்ட தொடர் மிகவும் குறுகிய காலம் மட்டுமே கொண்டிருப்பதால் சுமூகமாக நடத்தி முடித்திட அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் எதிர்கட்சிகள் பல்வேறு முக்கியமான விஷயங்கள் விவாதிக்க வேண்டி இருப்பதாக அப்போது கூறி இருக்கின்றனர் . குறிப்பாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த விவாதம் நடத்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன.
இது தவிர டெல்லி கார் குண்டு வெடிப்பு மற்றும் பல்வேறு மாநிலங்கள் சார்ந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தரப்பில் கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. அனைவரும் குளிர்ந்த மனதோடு இதில் கலந்து கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அப்போது கேட்டுக்கொண்டார் .
மத்திய அரசு சுகாதார மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் மசோதா 2025, மணிப்பூர் சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா , மத்திய கலால் திருத்த மசோதா ஆகிய முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்த இருக்கிறது . மேலும் அணுசக்தி மசோதா , காப்பீடு சட்டங்கள் திருத்த மசோதா மற்றும் இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா , தேசிய நெடுஞ்சாலைகள் திருத்த மசோதா , திவால் நிலை மற்றும் திவால் குறியீட்டு திருத்தம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சட்ட முன் வடிவுகளும் இந்த நாடாளுமன்றத் தொடரில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து நடைபெறும் முதல் குளிர்கால கூட்டத்தொடர் இது. இந்த தொடரில் ஜிஎஸ்டி காம்பென்சேசன் செஸ் வரிக்கு மாற்றாக புகையிலை பொருட்களுக்கு பாவ வரி விதிக்கும் மசோதாவை அரசு கொண்டு வர உள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications